29/07/2021

சித்தன் எத்தன் பித்தன் பித்தன்

 

புதிதாய்ச் சொல்பவன் சித்தன்
புதிதுபோல் சொல்பவன் எத்தன்
புதிராய்த் தெரிபவன் பித்தன்
புதிரில் தெளிபவன் பித்தன்

கண்கள் பருகையில் கண்ணாடி எதற்கு?

 


கண்கள் பருகையில்
கண்ணாடி எதற்கு?
இதழ்கள் தழுவையில்
இடைவெளி எதற்கு?
வா...தேனீரே..

✍️செ. இராசா

அத்தனை நெருக்கடிகளுக்கு இடையேயும்

 


அத்தனை நெருக்கடிகளுக்கு இடையேயும்
உன்னை நேசிக்கிறேன்...ஏன் தெரியுமா?
சூடாய் இறங்கிய பின்
சுகமாய் இருப்பதால்..‌‌

#தேனீர்

28/07/2021

 

ஒவ்வொரு ஆட்சியிலும்
மாற்றி எழுதப்படுகிறது
வரலாற்றுப் பாடங்கள்

அனைத்துமே கவிதை

 

தினமும் உன்னை ஆவணம் செய்கிறேன்!
அனைத்துமே கவிதை என்கிறார்கள்....
எனில்; காப்புரிமை எனக்குத்தானே?!
 
✍️செ. இராசா

26/07/2021

பார்த்ததும் தோற்றேன் பாடல்

 


❤️❤️❤️💜💜💜💜💜❤️❤️❤️
#பார்த்ததும்_தோற்றேன்
#பாடல்
❤️❤️❤️💜💜💜💜💜❤️❤️❤️
உன்னைக் காணலைனா பத்தி எரியுது
ஒன்னும் புரியாமல் படபடங்குது
கண்ணோ கண்ணகியா கதகதங்குது
காதல் என்றாலே கொளுத்தச் சொல்லுது
ஆனால் ‌..
கண்ட பின்னாலே காட்சி மாறுது
காணும் பொருளெல்லாம் காஷ்மீர் ஆகுது
என்னக் கருமமிது எனக்குப் புரியல
இன்னுமதை எனக்கு விளக்(ங்)க முடியல...

லாலே லால லல்லா லால லல்லா லா
லல்வில் லா (law) எல்லாம் ஒன்னுமில்ல லா

💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

உன்னால் எல்லாமே மாறிப்போனது
ஊரே ஊடகமா சாட்சி சொல்லுது
என்னால் முடியாது இதுக்கு மேலடா
ஏன்டா என்னைவிட என்ன வேலைடா
நீ...
கண்ணால் பேசசொல்ல கவ்விக் கொள்ளுது
மூச்சோ தகிடதகிட மூச்சு வாங்குது
கட்டில் மெத்தையெல்லாம் கனவு காணுது
மெட்டில் உனைக்கட்டிப் பாட சொல்லுது

லாலே லால லல்லா லால லல்லா லா
லல்வில் லா (law) எல்லாம் ஒன்னுமில்ல லா

❤️❤️❤️💜💜💜💜💜❤️❤️❤️

✍️செ. இராசா