புதுக்கவிதை
இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
12/04/2023
வெண்பாவை வைத்தொன்றும்
வெண்பாவை வைத்தொன்றும்
....வெண்'பாவை தேடவில்லை
கண்பாவை கண்டாலும்
......கண்'பாவை- உண்டதில்லை
என்பாவை ஆழத்தில்
......என்'பாவை வீற்றிருக்க
நன்'பாவாய் நானிருக்கேன்
......நம்பு!
செ. இராசா
(சும்மாவே புரியாது. இதுல இதுவேறயா....
அதானே...இப்பப் பாருங்க புரியும்.
பாவை என்றால்
#கருவிழி
என்றும்
#பெண்
என்றும் இரண்டு பொருள்கள் வருமாறு தொடுத்துள்ளேன். இப்பப் பாருங்க....)
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment