07/11/2021

MIND YOUR SPEED

  


MIND YOUR SPEED என்ற வாசகம் கத்தார் நெடுஞ்சாலையில் எழுதி இருக்கும். எவ்வளவு அர்த்தமான வாக்கியம் அது?!
வண்டியின் வேகத்தை மட்டுமா குறிக்கிறது. நம் மன வேகத்தையும் அல்லவா குறிக்கிறது.

நம் மன வேகத்தைக் கூட்டும் ACCELERATORம் அதைக் குறைக்கும் BREAK ம் நாம் தானே வைத்திருக்கிறோம். ஆம்....MIND YOUR SPEEED. சில நேரங்களில் MUTE YOUR MIND (ZERO SPEED) இது சாத்தியமா என்ன?!
கண்டிப்பாக சாத்தியமே... ஆனால் பயிற்சியும் முயற்சியும் வேண்டும்.

#மன_ஊர்தி_வெண்பா

தரையூர்தி வேகத்தைத் தாண்டியே பாயும்
விரைவூர்தி வேகத்தை விஞ்சியே போகும்
மனவூர்தி என்கின்ற வாகனம் ஒன்றில்
தினமேறி ஆய்ந்தால் தெளிவு

✍️செ. இராசா

No comments: