ஆயிரந்தான் இருந்தாலும் 
..........அவபோல யாருமில்லை
ஆத்தாடி...அவசமைச்சால் 
.........கமகமக்கும் என்னசொல்ல?
அவளப் போல யாரு- அவ
சமையல் சூப்பர்_ஸ்டாரு
மீனு குழம்பு வச்சா 
............மூனுநாளு மணமணக்கும்
மீண்டும் வக்கச் சொல்லி 
.............நாக்குநம்மை  நமநமக்கும்
நாட்டுக் கோழி வச்சா 
............நாலுநாளு ருசியிருக்கும்
நாக்கில் வப்ப தெல்லாம் 
............நாட்டுக்கோழி சுவையிருக்கும்
சைவம் சமைச்சாலும்
...........சப்புக்கொட்டி வாய்வலிக்கும்
சந்து பொந்தெல்லாம் சத்தியமா 
............எதிரொலிக்கும்
அவளப் போல யாரு- அவ
சமையல் சூப்பர் ஸ்டாரு
(அய்.....சோறு சோறு சோறு... அப்படின்னு ![]()
![]()
![]()
![]()
![]()
)

No comments:
Post a Comment