08/11/2020

என் அன்பு கண்ணாடிக் கோப்பை



உன்னைப் பார்க்கும்போதெல்லாம்
ஓர் உற்சாகம்...
உன்னைப் பற்றும்போதெல்லாம்
ஓர் சந்தோசம்...
ஆம்..
உண்மையில் நீ ஓர் திறந்த புத்தகமே!
உள்ளதை மறைக்காமல்
ஊருக்கேக் காட்டுவதால்...

உண்மையில் நீ ஓர் அழகுப் பாத்திரமே!
அதததற்குத் தகுந்தாற்போல்
அப்படியே மாறுவதால்!

உண்மையில் நீ ஓர் அற்புத் பேரழகே
ப்பா....
சாயம் பூசாமலே
அப்படியே மின்னுவதால்!

ஆமாம்...
எங்கிருந்து கற்றாய் இக்கலையை?
கண்டதும் உசுப்பேத்தி
கவ்விடச் செய்கின்றாய்..
கவ்விடும் வேகத்தில்
உறிஞ்சிட வைக்கின்றாய்..
விரலுக்கு ஒன்றும்
இதழுக்கு ஒன்றுமாய்
வெவ்வேறு வெப்பத்தில்
வித்தியாசம் புரிகின்றாயே..
சொல் எங்கிருந்து கற்றாய்?!

உண்மையில்
நீ ஓர் ஆச்சரியக் கோப்பையே..
இன்னும்... இன்னும்...
என்னையும் கவிழ்ப்பதால்...

#என்_அன்பு_கண்ணாடிக்_கோப்பைக்கு
✍️செ.இராசா

No comments: