07/11/2020

நரகாசுரன் நரகாசுரன் நரகாசுரன்டா

 


நரகாசுரன் நரகாசுரன் நரகாசுரன்டா- பல
நரகாசுரன் மிரண்டோடிட கரங்கோர்த்திடடா
நரகாசுரன் நடிமாடிடும் சிலபேர்களடா-இனி
நரகாசுரன் விலகோடிட படைசேர்த்திடடா

கெட்ட நோயைப் பரப்பிடும் மூடரைக்
கட்டி வைத்துத் தோள்களை உரித்திடவா
.......
பட்டப் பகலில் கொள்ளைகள் அடிக்கிற
பாவிப் படையைப் போட்டுத் தாக்கிடவா
......
நாதி யற்ற நல்லோர் வாழ்வினை
நைக்கும் பேரை நையப் புடைத்திடவா
......
சாதிப் பெயரில் சங்கினை அறுக்கிற
சைத்தான் நெஞ்சில் நஞ்சினை அகற்றிடவா
...
காமம் ஏறிச் சுற்றிடும் நாய்களின்
கையை காலை எல்லாம் அறுத்திடவா
......
பான மேற்றிப் படுத்திடும் வீணரை
பாதம் தூக்கி நச்சென மிதித்திடவா
....
இலஞ்சம் வாங்கி குவிக்கிற ஈனரை
நாலு போடு நறுக்கெனப் போட்டிடவா

இருக்கும் சான்றை மறைத்திடத் துடிக்கிற
எதிர்க்கும் பேர்க்குக் #கீழடி காட்டிடவா..

✍️செ.இராசா

No comments: