14/01/2019

#மோனை_எதுகை (2)



#மோனை_எதுகை (2)
**********************************************
சீர்களை வைத்து மோனை எதுகை எட்டு வகைப்படும்.

1. அடி மோனை -------அடி எதுகை
2. இணை மோனை----இணை எதுகை
3. பொழிப்பு மோனை--பொழிப்பு எதுகை
4. ஒருஉ மோனை-----ஒருஉ எதுகை
5. கூழை மோனை----கூழை எதுகை
6. மேற்கதுவாய் மோனை---மேற்கதுவாய் எதுகை
7. கீழ்க்கதுவாய் மோனை--கீழ்க்கதுவாய் எதுகை
8. முற்று மோனை-----முற்று எதுகை

1. அடி மோனை -------அடி எதுகை
***********************************
அடி மோனை: அடி தோறும் முதல் சீரில் மோனை வருவது.

(உதாரணம்)

மாவும் புல்லும் ஆஆஆ ஆஆஆ
மாலை மதியும் ஆஆஆ ஆஆஆ

அடி எதுகை: அடி தோறும் முதல் சீரில் எதுகை வருவது.

(உதாரணம்)

மானும் புல்லும் ஆஆஆ ஆஆஆ
தேனும் புள்ளும் ஆஆஆ ஆஆ

2. இணை மோனை----இணை எதுகை
****************************************
இணை மோனை: முதல் இரண்டு சீர்களில் மோனை வருவது.

(உதாரணம்)

"அத்தான் அப்படியே வந்து என்னை"

இணை எதுகை: முதல் இரண்டு சீர்களில் எதுகை வருவது.

(உதாரணம்)

"அத்தான் செத்தான் என்று சொல்ல"

3. பொழிப்பு மோனை--பொழிப்பு எதுகை
*************************************************************
பொழிப்பு மோனை: முதல் மற்றும் மூன்றாம் சீர்களில் மோனை வருவது.

(உதாரணம்)

"செந்தமிழ் பேசிடும் செருக்குள்ள புலவனே"

பொழிப்பு எதுகை: முதல் மற்றும் மூன்றாம் சீர்களில் எதுகை வருவது

(உதாரணம்)

"செந்தமிழ் பேசிடும் செந்தமிழ் புலவனே"

4. ஒருஉ மோனை-----ஒருஉ எதுகை
*********************************************************
ஒருஉ மோனை: முதல் மற்றும் நான்காவது சீர்களில் மோனை வருவது.

(உதாரணம்)

"செந்தமிழ் பேசிடும் புலவனின் செருக்கு"

ஒருஉ எதுகை: முதல் மற்றும் நான்காவது சீர்களில் எதுகை வருவது .

(உதாரணம்)

"செந்தமிழ் பேசிடும் புலவனின் செந்தமிழ்"

5. கூழை மோனை----கூழை எதுகை
****************************************
கூழை மோனை: முதல் மூன்று சீர்களில் மோனை வருவது.

(உதாரணம்)

"செந்தமிழ் செழுமையைச் செதுக்கிய புலவனின்"

கூழை எதுகை: முதல் மூன்று சீர்களில் எதுகை வருவது.

(உதாரணம்)

"செந்தமிழ் என்பது தேன்சுவை உள்ளது"

6. மேற்கதுவாய் மோனை---மேற்கதுவாய் எதுகை
****************************************
மேற்கதுவாய் மோனை: இரண்டாம் சீர் விடுத்து மற்ற சீர்களில் மோனை வருவது.

(உதாரணம்)

"ஆறு முகத்தா னாகும் அமுதம்"

மேற்கதுவாய் எதுகை: இரண்டாம் சீர் விடுத்து மற்ற சீர்களில் எதுகை வருவது.

(உதாரணம்)

"கற்றவர் செய்கிற நற்றமிழ் பற்றினை"

7. கீழ்க்கதுவாய் மோனை--கீழ்க்கதுவாய் எதுகை
****************************************************************************
கீழ்க்கதுவாய் மோனை: மூன்றாம் சீர் விடுத்து மற்ற சீர்களில் மோனை வருவது.

(உதாரணம்)

"அவிர்மதி அனைய திருநுதல் அரிவை"

கீழ்க்கதுவாய் எதுகை: மூன்றாம் சீர் விடுத்து மற்ற சீர்களில் எதுகை வருவது

(உதாரணம்)

"அன்ன மென்ன அழகுற மன்னும்"

8. முற்று மோனை-----முற்று எதுகை
***************************************
முற்று மோனை: நான்கு சீர்களில் முற்றிலும் வருவது.

(உதாரணம்)

"தூய துணைவன் துறந்தமை தூற்றும்"

முற்று எதுகை: நான்கு சீர்களில் முற்றிலும் வருவது

(உதாரணம்)

"இங்கித மங்கள மெங்குமி லங்குக"

(சிறப்பில்லா எதுகை மோனைகள் தொடரும்..........)

செ. இராசா....

முதல் பகுதி: https://www.facebook.com/photo.php?fbid=2274562309235277&set=a.459762690715257&type=3&theater

No comments: