கிணற்றை உலகமாய் நினைக்கின்ற
கிணற்றுத் தவளையாய் இல்லாமல்- நீ
தன்னிலை யாதென அறிந்திடுவாய்!
தன்னையேப் புகழ்வதை நிறுத்திடுவாய்!
மலரின் தேனைத் துறக்கின்ற
மலத்தின் ஈபோல் திரியாமல்- நீ
பயனுள்ள சொல்லைப் பேசிடுவாய்!
பயனில்லா சொல்லை உதறிடுவாய்!
நெல்லிலே பதரினைப் பிரிப்பதுபோல்
சொல்லிலே பதரினைப் பிரித்தெடுக்க- நீ
ஞானக் காற்றிலே தூற்றிடுவாய்!
ஞாலம் போற்றிட வாழ்ந்திடுவாய்!
✍️செ.இராசா
No comments:
Post a Comment