19/08/2018

நான் உன்னைக் காதலிக்கிறேன்



நான் உன்னைக் காதலிக்கிறேன்
என்று எப்போதும் சொல்லமாட்டேன்
ஏனென்றால்
நீ என்ற வார்த்தைக்கு
நான் என்றுதானே அர்த்தம்....

நான் உனக்கு எந்த வாழ்த்தும் சொல்லமாட்டேன்
ஏனென்றால்
உனக்கான அனைத்து வாழ்த்துகளும் எனக்கானதுதானே...

நான் உனக்கு எந்தப் பரிசும்
வாங்கித் தரமாட்டேன்
ஏனென்றால்
உனக்கான அனைத்துப் பரிசுகளும் நான்தானே.....

நான் உன்னை கண்டிப்பாக புகழமாட்டேன்
ஏனென்றால்
அது என்னை நானே புகழ்வதாய் ஆகிவிடாதா?!!

நீயும் என்னைத் திட்டிவிடாதே
ஏனென்றால்
அது உன்னை நீயே திட்டுவதாய் ஆகிவிடாதா?!!

பிறகு நானும் தாங்க மாட்டேன்..

வாழ்வோம் வளமுடன்

✍️செ. இராசா

(நாங்களும் சமாளிப்போம்ல....)

No comments: