தந்தையின் தந்தையார்
......தந்தைக்குத் தந்ததை
உந்தையும் தந்தார் உனக்கு!
உந்தையைப் போலவே
...............உந்திடும் விந்தையால்
தந்தையாய் மாறுவாய் தந்து!
தந்ததைத் தந்திடும்
.............தந்தையார் ஓட்டத்தில்
மந்தையாய்ப் போவதா வாழ்வு?!
மந்தையாய்ப் போகிற
............மாயத்தைப் போக்கிடச்
சிந்தையைச் சீராய்ச் செதுக்கு!
✍️செ. இராசா
(புரியுது...புரியுது....என
#திருவண்ணாமலை
No comments:
Post a Comment