பறையிசைத் தாளங்கொண்டே பாட்டிசைக்க
தமிழன்னைத்
தாழ்வணங்கித்
தொடங்குகின்றோம்...
குறையேதும்
வந்திடாமல்
காத்திடவே
ஆசானை
இங்கிருந்தே
வணங்குகின்றோம்..
தோல்கட்டித்
தட்டித்தட்டிக்
கொட்டுகின்ற
தோழர்கள்
தோள்கொடுக்கப்
பாடுகின்றோம்....
கைதட்டித்
தட்டித்தட்டி
ஊக்குவிக்க
வந்துள்ள
சபையோர்களை
வேண்டுகின்றோம்..
வந்துள்ள சபையோர்களை வேண்டுகின்றோம்..(2)
No comments:
Post a Comment