அடியே அன்ன பூரணி
...உன்னை மிஞ்ச யாரினி
வாடி வர்ண மின்மினி
...என்னை தீபமாக்கு நீ!
...எண்ணை தீபமாகு நீ.........!!!
அடியே என்ன மாடல்நீ!
....ஆப்பிள் நோகும் பாரினி!
வாடி மின்ன லூற்றுநீ!
....எந்தன் வாட்டம் போக்குநீ!
....என்னுள் வாட்சக் கூட்டுநீ......!!!
செ. இராசா
இன்று காலை என் மனைவி சமைத்த உணவைப் பாராட்டி #அன்னபூரணி என்று ஒரு பட்டம் வழங்கினேன் (அப்பப்ப அப்படித்தான் விட்ருங்க...சோறு
வேணுமில்லையா) இதில் என்ன ஆச்சரியம் என்றாக் கேட்கின்றீர்கள்?!... என்
தந்தையார் தற்சமயம் காசி யாத்திரையில் உள்ளார்கள். அங்கிருந்து என்
தம்பியிடம் அன்னபூரணி சிலை வாங்கியதாகக் கூறியுள்ளார்கள். என் தம்பியும்
அவரிடம் அன்னபூரணி என்றால் என்ன என்று கேட்டுள்ளான். என்னிடம் பேசும்போதும்
அதுபற்றியே பேசினான். என் ஆச்சரியத்திற்கும் அளவே இல்லை. காரணம் அதே
பெயரில் இன்று அனைவரும் பேசுகிறோம் என்பதே. ஆக..இந்த அன்னபூரணி சொல்ல
வருவது என்னவாக இருக்கும்..... யோசித்தபடியே எழுதிவிட்டேன்!
நன்றி எம் அன்னபூரணி!
செ. இராசா
No comments:
Post a Comment