17/05/2018

தோள் கொடு தோழா--105வது களஞ்சியம் கவிதைப் போட்டி (வெற்றிக்கவிதை)


105 ஆவது களஞ்சியம் கவிதைப் போட்டி
***********************************
கிடைத்த இடம்: முதலிடம்

நடுவர்:................திரைப்படப் பாடலாசிரியர் திரு. நிகரன் அவர்கள்

அமைப்பு:.............தமிழ்ப்பட்டறை
(தமிழகம் முழுவதும் இதுவரை 7 இலக்கியப் பேரவைகள் உள்ளது, இனி 8வது சேலத்தில் வரும் 20.05.2018 அன்று இனிதே துவக்கம்)

தலைவர்:.............திரு. சேக்கிழார் அப்பாசாமி ஐயா

🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼

தோள் கொடு தோழா
*********************
குளமும் ஏரியும் தொலைந்ததினால்- நம்
நிலமும் நீரினை உறிஞ்சலையே!
வரவின்றி செலவிடும் கயமையினால்- நீர்
வருகின்ற ஊற்றுகள் மறைகிறதே!

நிலத்தடி நீர்வளம் குறைந்ததினால்- நம்
கிணத்தடி எல்லாம் வற்றியதே!
ஆழ்துளைக் கிணறுகள் பெருகியதால்- நீர்
ஆழமாய் அடியினில் செல்கிறதே!

மரங்களை எல்லாம் சாய்த்துவிட்டு-நாம்
மழையில்லை என்பது முறையன்றோ?!
குளங்களை எல்லாம் மூடிவிட்டு- நீர்
வளமில்லை என்பதும் சரியன்றொ?!

ஆற்றில் நடக்கும் அரசியலால்- நம்
சோற்றிலும் ஈரம் இல்லையன்றோ?!
ஆற்றாமை யில்லா அரசுகளால்- நாம்
தோற்றேப் போனதும் உண்மையன்றோ?

போதும் போதும் என்தோழா- நாம்
பொறுத்தது போதும் என்தோழா!
தோல்வியை வெல்வோம் என்தோழா- நீ
தோளினைத் தருவாய் என்தோழா!

சமூகம் என்பது நாம்தோழா- இனி
சமூகத்தை வையாதே என்தோழா!
தரித்திரம் வெல்வோம் என்தோழா-இனி
சரித்திரம் படைப்போம் வாதோழா!
https://www.facebook.com/photo.php?fbid=2012946232356560&set=gm.2033996626919243&type=3&theater&ifg=1
-✍️செ.இராசா-


No comments: