20/08/2024

வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்(2)

வாழ்க வாழ்க வளமுடனே(2)
வாழும் வாழ்வினை
...அர்த்த மாக்கிடும்
........வாழ்க வளமுடன்!
நாளும் நாவிலே
...நாமும் சொல்லுவோம்
.........வாழ்க வளமுடன் !
தேயும் ஆயுளை
....தேற்றும் மந்திரம்
..........வாழ்க வளமுடன்!
பாயும் வேங்கையைப்
.....பணிய வைக்குமே
.........வாழ்க வளமுடன்!
வாழ்க வாழ்க வளமுடனே! (2)
ழகர ஒற்றினை சொல்லும்
...வேளையில் என்ன நடக்குது?
வளைந்த நாக்கது தொட்ட
... வேளையில் தூண்டப் படுகுது!
....சக்கரம் தூண்டப்படுகுது!
துரிய நிலையிலே வாழ்த்தும்
... வேளையில் என்ன நடக்குது?
பரியின் வேகத்தில் எண்ண
....அலையெலாம் விண்ணில் பாயுது
....அலையெலாம் ஆற்றல் ஆகுது!
வாழ்க வாழ்க வளமுடனே! (2)
வாழ்க வளமுடன் சொல்லில்
...பிழையென யாரு சொன்னது?
ஆழ்ந்து நோக்கிட நேரம்
...ஒதுக்கிடா மாந்தர் சொல்வது!
...ஏற்றிடா மாந்தர் சொல்வது!
மகர ஈற்றுடன் அத்து
....சாரியை வேண்டும் என்பது
தவிர்க்கச் செய்யலாம் தேவை
.....ஏற்படின் நன்னூல் சொன்னது!
.....குறள்களில் சான்று உள்ளது!
வாழ்க வாழ்க வளமுடனே! (2)

No comments: