07/05/2022

இலக்கியம் ஆய்வோம் - 5 (பெரிய புராணம்)

 


3. #சாகத்துணிந்த_நாயன்மார்கள்_4

சிவ பக்தியில் ஒருவொருக்கொருவர் போட்டி போட்டுகொண்டு பக்தி செலுத்தியதில் சாகவும் துணிந்தவர்களைப் பற்றி இப்போது பார்ப்போம்.

3.1 #அரிவட்டாயர்

சிவனடியார் ஒருவருக்கு உணவு கொண்டு செல்லும்போது வழியில் சிந்தியமையால் தன் கழுத்தைத் தானே அரிந்து கொண்டவர்.

3.2. #ஏயர்கோன்_கலிகாமர்

சுந்தரர் தன் திருமணத்திற்காக சிவனையே தூதுவிட்டார் என்னும் செய்தியறிந்து அவர்மேல் கோபத்தில் இருந்தார். ஒருசமயம் ஏயர்கோன் கலிகாமருக்குக் கடுமையான சூலை நோய் வந்தபோதும், இவரைக்காண வந்த சுந்தரரைப் பார்க்கப் பிடிக்காமல் தன் வாளால் கிழித்துத் தன்னையே மாய்த்துக் கொண்டார்.
அவருடைய மனைவியாரும் உயிர்விடத் துணிந்தார். சுந்தரனார் இது கண்டு வேதனை பொறுக்காமல் தானும் இறந்தழிவேன் என்று வாளைப் பற்ற இறைவன் அருளால் ஏயர்கோன் கலிகாமர் உயிர் பெற்றாராம்.

3.3 #ஏனாதிநாதர்

போரில் பகைவனைக் கொல்லப்போகும் சமயத்தில் பகைவனின் நெற்றியில் திருநீறு இருந்ததைக்கண்டு அவனே தன்னைக் கொல்லும்படி நடந்துகொண்ட அரசரிவர்.

3.4 #புகழ்சோழன்
சிவபூசைக்குரிய பூக்களைப் புகழ்ச்சோழரின் யானை தட்டிவிட்டது கண்டு கோபம் கொண்ட எறிபத்த நாயனார் என்னும் சிவனடியார் அந்த யானையையும் எதிர்த்துவந்த நான்கு பாகன்களையும் வெட்டி வீழ்த்தினார். இதைக் கேள்விப்பட்ட சோழன் மிகவும் மனம் நொந்து தானே பொறுப்பேற்று தன் கழுத்தை வெட்டிக் கொள்ளப் பாய்ந்தான். அப்போது எறிபத்த நாயர் தானே தவறிழைத்தேன் என்னைக் கொல்லுங்கள் என்றார். அப்போது சிவனின் அசரீரியில் அவன் திருவிளையாடல் இஃதென்று விளக்கப்பட்டு யானையும் பாகன்களும் நலமோடு திரும்பினர் என்றும் கூறப்படுகிறது.

இங்கே எறிபத்த நாயனாரும் நாயன்மார்களில் ஒருவராக, கோப நாயன்மார்கள் வரிசையில் வருகிறார். ஆக... இருவருக்கும் ஒரே கதைதான். யாம் வைத்த இடம்தான் வேறு வேறு.

No comments: