பயங்கரவாதம் ஒரு பக்கம்
படித்திடும் ஆசை மறுபக்கம்
இரண்டிற்கும் இடையில் போராட்டம்
இருந்தது மலாலா வாழ்வோட்டம்
ஜின்னா வழியினில் சென்றவருள்
இன்னா வழியினில் சென்றசிலர்
எல்லா சிறுமியும் பள்ளிசெல்ல
பொல்லா மனிதராய் தடுத்தனரே....
கல்லா குழந்தைகள் எல்லோரும்
நல்லா படித்திட வேண்டுமென்று
அல்லா துணைவர வேண்டிக்கொண்டு
பொல்லா கூட்டத்தை எதிர்த்தாளே....
மதியில்லா அரக்கரின் தீச்செயல்கள்
மலாலா அடைந்த வேதனைகள்
இரண்டையும் இணையத்தில் பதிவிட்டு
இறுதியில் தனியாய் வென்றாளே....
படித்திட முடியா சூழலிலும்
படித்திட எண்ணிய மலாலாவை
மனதால் ஒருமுறை வாழ்த்திடுவோம்!
மதியால் உலகை வென்றிடுவோம்!
—-செ. இராசா——
இன்னா வழியினில் சென்றசிலர்
எல்லா சிறுமியும் பள்ளிசெல்ல
பொல்லா மனிதராய் தடுத்தனரே....
கல்லா குழந்தைகள் எல்லோரும்
நல்லா படித்திட வேண்டுமென்று
அல்லா துணைவர வேண்டிக்கொண்டு
பொல்லா கூட்டத்தை எதிர்த்தாளே....
மதியில்லா அரக்கரின் தீச்செயல்கள்
மலாலா அடைந்த வேதனைகள்
இரண்டையும் இணையத்தில் பதிவிட்டு
இறுதியில் தனியாய் வென்றாளே....
படித்திட முடியா சூழலிலும்
படித்திட எண்ணிய மலாலாவை
மனதால் ஒருமுறை வாழ்த்திடுவோம்!
மதியால் உலகை வென்றிடுவோம்!
—-செ. இராசா——
No comments:
Post a Comment