83வது களஞ்சியம் கவிதைப் போட்டியில் கவிதை எழுத எமக்கு வாய்ப்பளித்த திரு.சேக்கிழார் அப்பாசாமி அய்யா அவர்களுக்கும், முதல் இடத்திற்கு அடியேனின் கவிதையை தேர்வு செய்த நடுவர் திரு. நிகரன் ஐயா அவர்களுக்கும் மற்றும் ஊக்கம் தந்து பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
ரௌத்திரம் பழகு
****************
எங்கெங்கு காணினும் லஞ்சம் லஞ்சம்!
என்றுதான் தீருமோ மக்கள் பஞ்சம்!
ஏழைகள் வாழ்விலே எங்கே இன்பம்?
ஏய்ப்பவர் ஆள்வதால் எல்லாம் துன்பம்!
வாக்குகள் மாற்றியே வாய்ப்பு தந்தோம்!
வரிசையாய் மாறிய ஆட்சி கண்டோம்!
வாய்வழி வள்ளல்கள் பலரைக் கண்டோம்!
வரிகளால் வங்கியில் வாடி நின்றோம்!
திராவிடம் திராவிடம் என்று சொல்லி
திராவகம் வீசிய பலரைக் கண்டோம்!
தமிழினம் என்னினம் என்று சொல்லி
தமிழனைக் குத்திய சிலரைக் கண்டோம்!
சமத்துவப் போதனை செய்து கொண்டே
சாதியம் வளர்த்திடும் தலைமை கண்டோம்!
அடிக்கடி நிறங்களை மாற்றிக் கொண்டே
அறிவுரை வழங்கிடும் கொடுமை கொண்டோம்!
ஆத்திகம் நாத்திகம் கூறு போடும்
ஆள்பவர் மனங்களில் மாற்றம் வேண்டும்!
கோத்திரச் சூத்திரம் போட்டுப் பார்த்தால்
ரௌத்திரப் பார்வையில் எரிக்க வேண்டும்!
—�—செ. இராசா—�—
https://www.facebook.com/groups/1535309520121292/permalink/1947775012208072/
வரிசையாய் மாறிய ஆட்சி கண்டோம்!
வாய்வழி வள்ளல்கள் பலரைக் கண்டோம்!
வரிகளால் வங்கியில் வாடி நின்றோம்!
திராவிடம் திராவிடம் என்று சொல்லி
திராவகம் வீசிய பலரைக் கண்டோம்!
தமிழினம் என்னினம் என்று சொல்லி
தமிழனைக் குத்திய சிலரைக் கண்டோம்!
சமத்துவப் போதனை செய்து கொண்டே
சாதியம் வளர்த்திடும் தலைமை கண்டோம்!
அடிக்கடி நிறங்களை மாற்றிக் கொண்டே
அறிவுரை வழங்கிடும் கொடுமை கொண்டோம்!
ஆத்திகம் நாத்திகம் கூறு போடும்
ஆள்பவர் மனங்களில் மாற்றம் வேண்டும்!
கோத்திரச் சூத்திரம் போட்டுப் பார்த்தால்
ரௌத்திரப் பார்வையில் எரிக்க வேண்டும்!
—�—செ. இராசா—�—
https://www.facebook.com/groups/1535309520121292/permalink/1947775012208072/
No comments:
Post a Comment