காதல் கவிதை(யும்) எழுதிடவே- என்
காதலி கவிதா வேண்டுகின்றாள்!
கவிதையில் முதுமை காட்டாமல்- என்
கவிதையில் இளமை வேண்டுமென்றாள்!
இதோ... நானும் மா(ற்)றி விட்டேன்
............
............
நிலவாக நீ இருந்தால்
நீல்ஆம்ஸ்ட்ராங்காய் ஆகிருப்பேன்....
கடலாக நீ இருந்தால்
நதியாக கலந்திருப்பேன்...
கவிதாவாய் நீ இருந்தாய்
கணவனாக மாறிவிட்டேன்...
........
இல்லை.... இல்லை
இளமை இல்லை
இதைத்தானே எண்ணுகின்றாய்?!
இதோ;
எழுதி எழுதிக் குவித்துள்ள
எத்தனையோ கவிதைகளில்
புரிந்தும் புரியாத
புதுக்கவிதை போன்றவளே.....
ஆஹா......
இது சரி இல்லையே....
ம்......என்ன எழுதலாம்?
உயிரோடு மெய்சேர்ந்து
உருவான கவி(தா) நீ!
உன்னோடு எனைச்சேர்த்து
உருவான கவிஞன் நான்!
....எப்பூடி?!
....யாருக்கிட்ட?!
.......செ. இராசா......
............
............
நிலவாக நீ இருந்தால்
நீல்ஆம்ஸ்ட்ராங்காய் ஆகிருப்பேன்....
கடலாக நீ இருந்தால்
நதியாக கலந்திருப்பேன்...
கவிதாவாய் நீ இருந்தாய்
கணவனாக மாறிவிட்டேன்...
........
இல்லை.... இல்லை
இளமை இல்லை
இதைத்தானே எண்ணுகின்றாய்?!
இதோ;
எழுதி எழுதிக் குவித்துள்ள
எத்தனையோ கவிதைகளில்
புரிந்தும் புரியாத
புதுக்கவிதை போன்றவளே.....
ஆஹா......
இது சரி இல்லையே....
ம்......என்ன எழுதலாம்?
உயிரோடு மெய்சேர்ந்து
உருவான கவி(தா) நீ!
உன்னோடு எனைச்சேர்த்து
உருவான கவிஞன் நான்!
....எப்பூடி?!
....யாருக்கிட்ட?!
.......செ. இராசா......
No comments:
Post a Comment