06/03/2022

  


படைத்தவனை என்றேனும்
...பார்த்தேனே என்றால்
படைத்தவோர் பாலினத்தைப்
..பற்றி- விடைகேட்பேன்
முத்தொழில் செய்வதற்கும்
..முன்னிங்கே பெண்ணிருக்க
எத்தொழில் நீசெய்வாய் என்று?!

04/03/2022

வெண்பா_உரையாடல்---கண்ணாடி முன்னாடி


  

 

#வெண்பா_உரையாடல்
#ஒற்றைப்படை_நான்
#இரட்டைப்படை_தங்கை
Mythili Dhayalan

கண்ணாடி முன்னாடி
.........கைத்தூக்கி சீவுனா
பொண்டாட்டி வந்தெங்கே
........போறேம்பா- கிண்டலா‌‌
அப்ப சிரிச்சீனா
........அம்புடுத்தான் பார்த்துக்க
உப்புமாக் கண்டவன்போல் ஓடு!
(1)

சொன்னாதான் என்னண்ணா
.....சொத்தாக் குறைஞ்சிடும்
சின்னதாக் கிட்டும்ல
.....சந்தோஷம்..என்னத்தான்
எங்கதான் கிளம்புதோனு
......ஏங்கியே நாள்முழுக்க
கங்கலங்கத் தேவையாக் கூறு..
(2)

கூறுவதைக் கூறினாலும்
......கூறுவதை நம்பனுமே
சீறுகிற பாம்பைப்போல்
......சீறிடுவா- தாறுமாறா
வேறென்ன செய்யுறது
.....வீண்வாதம் வேண்டாம்னா
வேறுவழி சொல்லேன்மா நீ!
(3)

சொல்றத நீங்க
.......சிரிக்காம சொன்னாக்க
இல்லாளும் வாழ்வா
.......இனிமையா..பல்லஈனு
வச்சாப் படுபாவி
......வாய்ல வரதெல்லாம்
பச்சைபொய்னு கத்துறாங்கப் பாரு..
(4)

பாரெல்லாம் சொல்லுதும்மா
.......பாராட்டித் தள்ளுதும்மா
ஊரென்ன சொன்னாலும்
......ஓயாது- பாரம்மா
என்ன கிழிச்சேம்பா
......என்னத்த தந்தேன்பா
என்னம்மா செய்ய இனி!
(5)

ஒன்னுமேச் செய்யாம
........ஓனு முகத்தையும்
துன்பமா நீவச்சு
.........தான்பாரேன் .. என்னங்க
ஏங்கனே உங்கள
.........ஏந்த புரியுமேத்
தாங்கும் அவங்க தவிப்பு..
(6)

உம்முனு நானிருந்தா
....ஓயாம நச்சரிப்பா
சும்மான்னு சொன்னாலும்
....சொல்லென்று- வம்பிழுப்பா
ஒன்னுமில்லை என்றாலும்
.....உண்மையில்லை என்றுரைப்பா
என்னக் கருமம் இது?!
(7)

தன்னுலகம் பெண்டிர்க்குத்
......தன்குடும்பம் தான்அண்ணா
அன்பின் மிகுதியால்
.....ஆட்டிடுவர்..இன்னாது
நீங்கள் இரண்டுநாள்
.....நீண்டால் கவனிங்க
சங்கடப்படு வாங்கண்ணா சோர்ந்து!
(😎

தங்கையுன் வார்த்தையை
....தாய்ச்சொல்லாய் ஏற்பவனாய்
உங்கண்ணி முன்னால்
‌...உமக்காக- அங்கேநான்
அன்பாய் உரைத்தபின்
....ஆவதைச் சொல்கின்றேன்
என்னாகும் பார்ப்போம் இனி
(9)

✍️....... நானும் தங்கையும்

குறிப்பு: இங்கே கரு என்பது கற்பனையே. ஆமாம் சொல்லிப்புட்டேன்

03/03/2022

இது இருவழிப் பாதையில் .................தொடர்ப் பயணம்

 


ஒருபக்கம்; தன்னை உயர்த்தும் போராட்டம்!
மறுபக்கம்; தன்னை உணரும் போராட்டம்!

ஒருபக்கம்; தனித்துவம் ஆவதே அடையாளம்!
மறுபக்கம்; தன்னை இழத்தலே அடையாளம்!

ஒருபக்கம்; வெற்றியின் இலக்கே பிரதானம்!
மறுபக்கம்; அமைதியின் இருப்பே பிரதானம்!

ஒருபக்கம்; ஏற்றமும் இறக்கமும் எதார்த்தம்!
மறுபக்கம்; சமத்தில் மூழ்கிடும் ஆத்மார்த்தம்!

ஒருபக்கம்; வெளிச்சத்தில் தோன்றிடும் விமர்சனம்!
மறுபக்கம்; வெளிச்சத்தில் கண்டிடும் தரிசனம்!

ஆம்.....

இது இருவழிப் பாதையில்
.................தொடர்ப் பயணம்!
அது முரண்படும் போதிலும்
......................... என் பயணம்!

✍️செ. இராசா

02/03/2022

கண்ணாடி முன்னாடி .........கைத்தூக்கி சீவுனா

 


கண்ணாடி முன்னாடி
.........கைத்தூக்கி சீவுனா
பொண்டாட்டி வந்தெங்கே
........போறேம்பா- கிண்டலா‌‌
அப்ப சிரிச்சீனா
........அம்புடுத்தான் பார்த்துக்க
உப்புமாக் கண்டவன்போல் ஓடு!

✍️செ. இராசா

யார் சொன்னார்கள்...புராணங்கள் புளுகென்று!


 

யார் சொன்னார்கள்?
புராணங்கள் புளுகென்று!
யார் சொன்னார்கள்?
அத்தனையும் கதையென்று!
 
பாண்டுவால் அல்லாமல்
பாண்டவர்கள் பிறந்ததெப்படி?!
 
மூத்த மனைவி குந்திக்கு
மூன்று பேர்களாலும்
இளைய மனைவி மாத்திரிக்கு
இரண்டு பேர்களாலும்
நேரடியாய் அல்லாமல்
நேர்ந்ததுதான் எப்படி?!
ஆம்...
 பிந்தைய விந்துதான முறையின்
முந்தைய முன்னோட்டம்தானே அது!
 
கௌரவர்கள் அனைவரும்
கன்னிவழி வந்ததெப்படி?
திருதராஷ்டிரனின் விந்துவும்
காந்தாரியின் அண்டமும் சேர்ந்தக்
கருமுட்டையைப் பிரித்துத்
தனித்தனியே பானையிலிட்டு
செயற்கையாய் ஊட்டமூட்டி
இயற்கைபோல் ஈன்ற
இன்றைய சோதனைக்குழாய் முறையின்
அன்றைய சாதனைதானே அது?
 
இன்று சீனா உருவாக்கிய
செயற்கைச் சூரியனை வியக்கிறோமே..!!
அன்று கர்ணனின் திறமைக்கு
பரசுராமர் கொடுத்த சவாலென்ன?
செய்முறைத் தேர்வே
செயற்கைச் சூரியன்தானே
அது...
ஆச்சரியமில்லையா?!
 
உலகையே உலுக்குமென
ஒவ்வொருமுறை உரைக்கும்
அன்றைய பிரம்மாஸ்திரம் யாது?!
இன்றைய நியூக்ளியர் பாம் அல்லவா?
 
அதெல்லாம் இருக்கட்டும்....
 
எங்கோ நடக்கும் ஒன்றை
எங்கேயோ இருந்தபடி
நேர்வதை எல்லாம் அப்படியே
நேரலையில் கண்டு சொன்ன
சஞ்சயனின் செய்கையின்று
சாத்தியம் ஆகலையா?!
 
பலராமர் வந்தால்தான்
நலமாகும் என்றெண்ணி
சகுனி உரைத்ததுமே
சட்டென்று கூட்டிவந்த
வாகனங்கள் இந்நாளில்
வான் மார்க்கம் போகலையா?!
 
இலங்கைப் போர்முடித்த
இராமன் சீதையெல்லாம்
நாடு திரும்புகையில்
நடந்தா சென்றார்கள்?!
மிதக்கும் கல்லெடுத்து
மிதவைப் பாலமும்
எரிக்கும்படி அமைத்த
அரக்கு மாளிகையும்
மறைக்கும்படி செய்த
மாய மாளிகையும்
கற்பனை எனவொதுக்கும்
கட்டுக்கதை தானா?
 
அக்ரோணி சேனைகளும்
சக்கர வியூகங்களும்
வெறும்போர் எனவொதுக்கும்
வெற்றுக்கதை தானா?
இல்லை... இல்லை
கற்பனையே என்றாலும்
கற்பனைக்கும் காலுண்டு
காலம் கனிந்தால்.....
 
✍️செ. இராசா

 


வைத்த கடிகாரம்
........வாய்திறக்கும் அவ்வேளை
பைத்தியம் போலாகி
........பற்றியதைக்- கைத்தூக்கி
ஓங்கி அணைத்தபின்
........ஓரத்தில் வைத்துவிட்டு
தூங்கவா நானுனக்குச் சொல்?!

01/03/2022

சம்பளத் தேதியன்று

 


சம்பளத் தேதியன்று
....... சந்தோசம் வந்தங்கே
அம்பலக் காரரைப்போல்
........ஆகிவிடும்- நம்மாள்தான்
மாதக் கடைசியிலே
.........மல்லாக்க பார்த்தபடி
மீதத்தைப் பார்ப்பார் மிரண்டு!

✍️செ. இராசா

அம்பல காரர் -தலைவர்

புல்லாங்குழல் நான்
பூட்டிவைக்காதே...

சற்றே என்னுள் தடுமாற்றம்

 சற்றே என்னுள் தடுமாற்றம்
......தத்தித் தாவும் தமிழோட்டம்!
முற்றே இல்லை எனதாக்கம்
.....மூத்தோர் தந்தால் பெருமூக்கம்!
கற்றோர் சொல்லின் கருத்தாக்கம்
......கற்றேத் தந்தேன் கவியாக்கம்!
உற்றார் நெஞ்சில் உயிரோட்டம்
.....ஊன்றிப் பார்த்தால் உருவாக்கும்!

எப்போது பார்த்தாலும் ..........என்னையே நோண்டுறியே


 

எப்போது பார்த்தாலும்
..........என்னையே நோண்டுறியே
எப்பதான் விட்டுடுவ
...........இப்போதே- செப்பப்பா
வைப்பாட்டி நானில்லை
...........வையப்பா சீக்கிரம்
கைப்பேசிச் சூட்டைக் கணித்து!