05/09/2025

என்னுள் தமிழூற்றி

 

என்னுள் தமிழூற்றி
...எஃகின் வலுவேற்றி
......இன்பக் கவியேற்ற வைத்தவன்!
அன்பின் விதைதூவி
..,..ஆர்வ நீருற்றி
........ஆற்றல் தருவாக்கி விட்டவன்!
பின்னே நடைபோட்டு
.....முன்னே நமைவிட்டு
..........பேசு பொருளாக்கும் மன்னவன்!
தன்னை அறியார்க்கும்
.......தன்மை தரம்பார்த்து
.........தம்கை கொடுக்கின்ற நல்லவன்!

No comments: