புதுக்கவிதை
இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
26/10/2023
எண்ணச் சமரினில் எத்தனை மோதல்கள்
எண்ணச் சமரினில் எத்தனை மோதல்கள்
எப்படி வெல்லுவனோ?! - தீதை
எப்படிக் கொல்லுவனோ!
வண்ணக் கலவைபோல் வந்திடும் நட்பிற்குள்
என்குண நட்பெதுவோ?!- நட்பில்
நன்குண கற்பெதுவோ?!
திண்ணு கொளுத்தவர் தீண்டிடும் நேரத்தில்
கண்களை மூடனுமோ?- இல்லைக்
கைகளில் காட்டனுமோ?!
பண்டை உறவினைப் பாழுறச் செய்பவர்
பந்தத்தை ஏற்கனுமோ?!- இல்லை
பண்பெனத் தள்ளனுமோ?!
செ. இராசா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment