20/02/2021

நானும் மகிழுந்தும்- கட்டுரை

 



பொதுவாக வளைகுடா நாடுகளில் வேலைக்காக வருகின்ற பொறியாளர்களுக்கு பெரும்பாலும் வாகனங்களை நிறுவனங்களே வழங்குவது என்பது வாடிக்கையான ஒன்றே. எனக்கும் கத்தார் வந்த(2006)அன்றே #மிட்சுபிசி_பஜிரோ (Mitsubishi Pajero) ஓட்டுநரோடு கிடைத்தது. பிறகு அதைவிடக் குறைந்த மாடலான #மிட்சுபிசி_நாட்டிவாவை (Mitsubishi Nativa) மாற்றினார்கள். 2008ல்தான் எனக்கு ஓட்டுநர் உரிமம் கிடைத்தது. அதன் பின்னர் நான் ஓட்டிய முதல் வாகனம் #ஹோன்டா_சிட்டி (Honda city), அதன்பிறகு நான் வேலைபார்த்த அனைத்து நிறுவனங்களும் கொடுத்த அனைத்து வாகனங்களும் புதிய வாகனங்கள்தான் #0.00 KM ல் தான் எடுப்பேன். காரணம் இரண்டு வருடங்கள் ஒப்பந்த அடிப்படையில் Rent a Car நிறுவனங்களில் மாற்றி விடுவார்கள். அப்படி எனக்கு வந்த வாகனங்கள், #Nissan_Sunny, #Nissan_Tida, #Kia- #Rio, #Kia_Cerato மற்றும் தற்சமயம் #Kia_Sonet என்று எல்லாமே 0.KM தான்.
 
இதில் ஆச்சரியம் என்னவென்றால் அனைத்து மகிழுந்தும் Kia Sonet தவிர்த்து வெள்ளை நிறமே. இம்முறை என் மகன் மற்றும் மகளின் விருப்பத்திற்கிணங்க நிறுவனத்தில் முன்கூட்டியே சொல்லி சிவப்பு நிறம் வாங்கி வந்தேன். 
 
எனக்குப் பொதுவாக வாகனங்களின் மேலோ அல்லது பொருட்களின்மேலோ பற்றில்லா காரணத்தினால் இதுவரையிலும் சொந்த வாகனம் வாங்கவே இல்லை. நிறுவனங்கள் மாதா மாதம் ஒரு தொகை தந்துவிடும் என்பதால் சொந்த வாகனம் வாங்கினால் கண்டிப்பாக இலாபம்தான். ஆனால் ஏனோ ஒவ்வொரு முறையும் யோசித்து வேண்டாமென்றே ஒதுக்கிவிட்டேன். எதுவுமே நிரந்தரமில்லாபோது வாகனம் மட்டும் நிரந்தரமா என்ன?!. அதுவும் மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனாலும் புது வாகனத்தில் ஏறி அதை ஓட்டும்போது உள்ள அனுபவம் என்பதும் ஓர் சுகானுபவமே.
 
இந்த KIA SONET ன் மூலம் கொரியாவாக இருந்தாலும் இந்தியாவில்தான் தயாராகிறதாம் அதுவும் சென்னை என்கிறார்கள் (ஆந்திரா என்று சொல்கிறார்கள்). கத்தாருக்கு முதன் முதலாக வந்துள்ள மாடலாம் இது. அதுவும் வந்த 30 மகிழுந்துகளில் நான் ஓட்டும் வாகனமும் ஒன்றாம்...😊😊😊
 
வாழ்வோம்...வாழ்ந்துதான் பார்ப்போமே...
வாழ்க வளமுடன்

No comments: