மீன்கள்
  
(1)
 புதியதாய் நினைத்து
 பாய்ந்து செல்கிறது
 பழைய மீன்கள்
 
 (2)
 அடிக்கடி இடம்மாறி 
 அசுத்தம் செய்கிறது
 அதே மீன்கள்
 
 (3)
 இரையின் வருகைக்கு
 ஏங்கிக் கிடக்கிறது
 தொட்டில் மீன்கள்
 
 (மேலே சொன்ன மீன்கள் அனைத்தும் அரசியல் மீன்கள்)
 
 (4)
 உலகம் சிறிதென
 அலுத்துக் கொள்கிறது
 குடுவை மீன்கள்
  
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment