அந்த ஒரு துளியேதான்
குறிப்பிட்ட
 அந்த ஒரு துளியில்தான்
 அமிலம் காரமாகிறது...
 
 குறிப்பிட்ட
 அந்த ஒரு துளியில்தான்
 அண்டம் கருவாகிறது...
 
 ஆம்...
 அந்த ஒரு துளியே தான்
 
 தன்னை மதிக்க 
 தன்னம்பிக்கை பிறக்கும் எனில்
 தன்னை மதிக்க மதிக்க
 தலைக்கனம் பிறக்கிறது!
 
 தன்னம்பிக்கையை 
 தலைக்கனமாய் மாற்றுவது
 அந்த ஒரு துளியேதான்....
 
 ✍️செ. இராசா 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment