காமம் தவறில்லையா?
காமம் தவறெனில்...
காமத்துப்பால் எதற்கு?!
விளங்கவில்லையே...
வள்ளுவன் தவறிழைத்தானா?!!
காமம் தவறெனில்
காமசூத்ர வியாக்யானம் எதற்கு?!
புரியவில்லையே...
புலவன் புளுகுகின்றானா?!
காமம் தவறெனில்
காமரச பாசுரங்கள் எதற்கு?!
புத்திக்கு எட்டலையே...
பக்திக்கு பாதகமில்லையா?!
அன்று நாற்றம் எனில் மணம்
ஆனால் இன்று நாற்றம் நாறுகிறதே?!
அன்று காமம் எனில் காதல்
ஆனால் இன்று காமம் கதறுகிறதே?!
எனில் காமம் தவறா?!
ஆம்....
பிறன் மனைக் காமம்
பீறிட்டு வருமாயின்
காமம் தவறே.....
கட்டுப்பாடில்லா காமம்
காட்டாற்று வெள்ளமாயின்
காமம் தவறே.....
பொருந்தாக் காமம்
பொருந்தி நிற்குமாயின்
காமம் தவறே.....
ஆனால்....
இல்லறம் இனிதென
இல்லாள் துணையென
உணவிலே உப்பென
ஊடலில் கூடினால்
காமம் சரியே..
——இது திருக்குறள்
சிந்தையில் சிவனொடு
சிந்தயில் நினைவோடு
அளவிலே முறையாகி
அன்பிலே கூடினால்
காமம் சரியே..
——இது திருமந்திரம்
சீவவித்தை செறிவூட்டி
சீவனைத் தினம் கூட்டி
உடலை உறுதியாக்கி
உயிரை வளமாக்கினால்
காமம் சரியே...
——-இது வேதாத்திரியம்
காமத்திலிருந்து கடவுளுக்கு
——-இது ஓஷோ ரஜனீஷ்
காமம் ஞானத்தின் முதல்படி
——-இது கவியரசர்
முறையான காமம் எனில்
முற்றிலும் சரியே-அது
முக்திக்கான வழியே...
No comments:
Post a Comment