காயாத கானகத்தே
காதலிக்க ஆசை வச்சு
மேயாத மானை
மேயவிட்ட நாடகத்தை
பாய விரிச்சு வச்சு
பாய்மேல குத்த வச்சு
ராவெல்லாம் தூங்காமல்
ரசிச்ச கூட்டம் எங்கே?!
வள்ளி திருமணத்தை
வச்சா குத்தமுன்னு
மீறி வச்சாக்க
மழை தண்ணி வராதுன்னு
அரிச்சந்திர நாடகந்தான்
அதிக மழை தருமுன்னு
வச்ச கண் வாங்காமல்
விழிச்ச கூட்டம் எங்கே?!
பப்பூனும் டான்சும்
பம்பரமா ஆடுறத
விரல வாயில் வச்சு
விசில பறக்கவிட்டு
சந்தடி சாக்குல
சைட்டும் அடிச்சுக்கிட்டு
ராக்கெட் விடுகின்ற
ரசிகர் கூட்டம் எங்கே?!
கொட்டகை பின்னால
எட்டி எட்டி பார்த்துக்கிட்டு
நானும் பார்த்தேன்னு
நாளெல்லாம் சொல்லிக்கிட்டு
நாடகம் முடிஞ்சதுமே
நடிகர்கள தொட்டுக்கிட்டு
சிரிச்சே ரசிக்கின்ற
சிறுபிள்ளை கூட்டம் எங்கே?!
No comments:
Post a Comment