12/02/2019

சர(ண்)கவி என்பேன்!

நண்பர்களே,

ஒரு கவிதை இன்னொரு கவிதையை பிரசவிக்குமானால் அந்த கவிதை மிகச்சிறந்த கவிதை என்பது என் திண்ணம்.

அந்த வகையில் இன்று நான் முகநூலில் கண்ட தம்பி தமிழ் சரண் அவர்களின் ”எங்கள் சோழன்” என்ற கவிதை என்னைத் தட்டி எழுப்பியது. அவரின் கவிதையைப் படியுங்கள் அசந்து போவீர்கள்.

அவர் வரிகளுக்கு நான் வழங்கிய பின்னூட்டக் கவிதை இதோ...



வீரத்தை விதைப்பதில்
விவேகத்தைக் காட்டி- நீ
காரமாய் வழங்கினாய்
கவிநயம் ஊட்டி!

எவ்வரி சிறப்பென
எப்படிச் சொல்வேன்- நீ
எழுதிய வரிகளில்
என்னையே கொன்றேன்!

பாடலில் நீயொரு
பாரதி என்பேன்- நீ
பாயிரம் பாடியே
பாய்வதைக் கண்டேன்!

சரங்களாய் வெடிக்கிற
சரவெடி என்பேன்- நீ
சரணாகதி அடையா
சர(ண்)கவி என்பேன்!

வாழிய நீ பல்லாண்டு

✍️செ. இராசா

அவரின் கவிதைக்கான இணைப்பு கீழே

👇👇👇👇👇👇👇👇👇👇

https://www.facebook.com/100016252205774/posts/365636577321413?sfns=mo 

No comments: