ஒருமுறை கிடைப்பதே
.........வாழ்க்கையடா- அதை
உணர்ந்து கொண்டாலே போதுமடா!
இருமனம் இணைவதில்
.........இன்பமடா- அதில்
பிறந்திடும் பிள்ளைகள் செல்வமடா!
மூன்று கர்மங்கள்
....உள்ளதடா- அதன்
முறையினில் தெளிவதே ஞானமடா!
நான்கு தர்மங்கள்
.....இருக்குதடா- அதில்
நான்கிலும் மகிழ்பவன் ஞானியடா!
ஐந்து பூதமே
....உலகமடா- உன்
ஐம்புலன் அட(க்)ங்குதல் வெற்றியடா!
ஐந்திற்கு மேலே
.....ஆறறிவே- நல்
அறமின்றிப் போனால் பேரிழிவே!
ஏழாம் தலைமுறை
......வாழ்ந்திடவும்- நாம்
இயற்கையைக் காப்பது
நியாயமன்றோ?!
பாழாய்ப் போவதைத்
......தடுப்பதொன்றும்- ஒரு
எட்டாக் கனியோ?! இல்லையன்றோ?!
ஒன்பது துவார
....ஊனுள்ளே- உயிர்
உலவிட படைத்ததும் அவன்றோ?
என்றும் அவனை
.....நினைந்திருந்தால்- உயர்
பத்தும் பறந்து வருமன்றோ!!
செ. இராசா
11/07/2024
ஒன்றில் இருந்து பத்துவரை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment