சபரிமலை ஐயப்ப தரிசனம் மிகவும்
அருமையாக
இருந்தது உறவுகளே...1. நீலக்கல்லில் Virtual Booking ticket, ஆதார் அடையாள அட்டை & தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் (அ) PCR test result என அனைத்தையும் பரிசோதித்து முத்திரை வைக்கிறார்கள். (முத்திரை கட்டாயம் முத்திரை இல்லையேல் பின்னர் பம்பையில் திருப்பிவிட வாய்ப்புண்டு)
மேலும் அனைத்தையும் நன்றாகவே பார்க்கிறார்கள். என் ஊசியும் பையன் ஊசியும் கத்தாரில் போட்டிருந்ததால் சற்று நேரம் யோசித்தார்கள். ஆகவே குழந்தைகளைக் கூட்டிச் சென்றால் கட்டாயம் அனைத்து ஆவணங்களையும் வைத்திருக்கவும்.
2. பம்பைவரை வாகனம் செல்வதற்கு Pass வழங்குகிறார்கள். அதற்கான இடமும் அங்கேயே உள்ளது. ஆனால் இவ்வசதி ஒருமுறை மட்டுமே. வரும்போது நீலக்கல்லிற்கு பேருந்தில்தான் வரவேண்டும்.
3. சன்னிதானத்தில் தங்க அனுமதி இல்லை. அதற்கேற்றார்போல் பார்த்துக்கொள்ளுங்கள். நாங்கள் காலையில் பம்பையில் இருந்து கிளம்பினோம். கூட்டம் அவ்வளவாக இல்லை. சன்னிதானத்தில் மட்டும்தான் கூட்டம் அதிகமாக இருந்தது. வலதுபக்க வரிசையில் சென்றால் அதிக நேரம் எடுக்கிறது. இடதுபக்க வரிசை வேகமாகச் செல்கிறது. அருகில் இருந்து பார்ப்பதாக நினைத்து வலதுபக்கம் போவதென்னவோ நேர விரயம் என்றே நினைக்கிறேன். காரணம் சாமியை நெருங்கும் தருணம் மாற்றி விடுகிறார்கள். மேலும் சாமிக்கு முன்புறம் மிக நன்றாகத் தெரிவதுபோலவே மேடை அமைத்துள்ளார்கள்.
என்ன ஒரே ஒரு குறை. முன்பெல்லாம் இறைபக்தி அதிகமாக இருந்ததால் எல்லோரும் ஏறும்போது இடைவிடாமல் சரண கோசம் ஒலிக்கும். இப்போதோ அப்படி இல்லை. மேலும் தங்களின் மனைவியரோடு Video calling செய்தபடியே நடந்துவருவதெல்லாம் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதைத் தவிர்த்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
மற்றபடி மிகச் சுகாதாரமான முறையில் அமைத்த குடிநீர், மூலிகை நீர், கழிப்பறை, சிறுநீரக கழிப்பிட மேடைகள், மொத்த நீளத்திற்கும் துப்புரவாய் வைத்திருக்கும் பணியாளர்கள், அற்புதமான முறையில் கவனிக்கும் காவல்துறை என்று படு அமர்க்களமாக இருந்தது. மொத்தத்தில் மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது.
ஓம் சாமியே சரணம் ஐயப்பா
No comments:
Post a Comment