யார்சொன்னது ஒன்றும் இல்லை
பார் எங்கிலும் என்ன இல்லை
இன்றே இங்கே தேடிப்பாரடா
கட்டம்போட்டு நீ வாழாமல்
கோட்டைத்தாண்டி ஓடப் பாரு
எட்டிப் பாய்கிற எண்ணம் வையடா
உனக்குள்ளே இல்லை என்ற
எண்ணம் தேவை இல்லை
இல்லை என்னும் வார்த்தையும் இல்லை
விடியாத இரவுகள் இல்லை
உனக்கான எல்லை அட
என்றும் நீயே எல்லை
எல்லை தொட்டதும் மாறிடும் எல்லை
முடியாது வெற்றியின் எல்லை
ஓ
கடலலை என்றும் ஓயுமோ?!
தடைகளை நீயும் தாண்டிடு
விடைதரும் நேரம் வருகையில்
வெற்றியால் பதிலைக் கூறிடு
நடந்ததை மாற்றிட முடியுமோ?
கடந்ததை நீயும் வந்திடு
நடைமுறைக் காலம் கனிகையில்
அடைவதில் ஆர்வம் காட்டிடு
ஊர்வாயை எந்நாளும் நாம்பொத்த முடியாது
அந்நேரம் நம்காதை ஏன்பொத்தக் கூடாது
வீண்வேலை என்போரை நாமொன்றும் சொல்லாது
சச்சின்போல் ஸ்லெட்ஜிங்கை ஏன்பார்க்கக் கூடாது
கோபத்தால் தானே- அட
கோபம் மாய்ந்திடும் தானே- வெறும்
கோபம் கொள்வதும் வீணே- அதை
வேகமாய் மாற்றிவிடு...
வேகத்தால் தானே- பல
வெற்றிகள் சேர்ந்திடும் தானே- வெறும்
வெற்றென நிற்பதும் வீணே- பெரும்
வெற்றியைக் காட்டிவிடு..
நாளை நாளை என்றே நீயும்
நாளைத் தீர்த்தல் சரியா?!
இன்றை இன்றே காணா நீயும்
ஒன்றைத் தேடல் முறையா?!
கையை நன்றாய்க் கட்டிக் கொண்டால்
கற்கள் மாறுமா சிலையா?
கற்பனை நாளை கானல் கொண்டால்
சொற்கள் மாறுமா கவியா?!
வாடா நீ வாடா
வாடாமல் வாடா
வந்திடு நீ வாடா
வாழ்வோமடா....
போடா நீ போடா
போகட்டும் போடா
போனாலென்னடா
வெல்வோமடா...
போதை ....ஏ....போதை
போதை என்ன போதை
பார்வை போதை- நீ
பார்த்தால் போதை
ராதை...ஓ...... சீதை
ராத்திரி ஏன் கீதை
காமன் பாதை- நான்
கட்டில் மேதை..
OPTION-2
உடம்பெல்லாம் எண்ணை போட்டு
ஊரூரா உருண்டாலும்
அடி ஒட்டுற மண்ணே ஒட்டும்
அந்தத் தத்துவம் மட்டுமே நிக்கும்
கனவெல்லாம் தூக்கிக் கொண்டு
எங்கெங்கோ போனாலும்
அட கிட்டுற ஒன்னே கிட்டும்
இங்கே சத்தியம் ச்சும்மா நிக்கும்
எல்லாத்தையும் தூக்கிப்போடு
என்னோடு நீ ஆட்டமாடு
இன்பம் கோடி இங்கே உண்டு
என்றால் இதுவே சொர்க்கப் பந்து
OPTION-3
பணத்திற்கு மதிப்பென்ன
பார்த்தாயா தேர்தலிலே
பாருக்குள் நடப்பென்ன
பார்ப்போமா டீவியிலே
ஊறென்ன உறவென்ன
யாரென்ன சொன்னாலும்
நாமென்ன செய்யனும்
யார்வந்து சொல்லனும்?!
ஒன்னுக்குள் ஒன்னாகி
ஒன்னொன்னாத் தேடுவோம்
யாருக்கும் சொல்லாமல்
தீப்பந்தம் ஏத்துவோம்
No comments:
Post a Comment