புரட்டும் போதெல்லாம் 
பூக்கின்ற புதுமலரே...
வாசிக்கும் போதெல்லாம்
வாசம்தரும் நறுமலரே...
 
சொல்லோடு சொல் சேர்ந்து
சொக்கவைக்கும் சொல்லமுதே...
கண்ணோடு கை கோர்த்து
கண்திறக்கும் களஞ்சியமே...
 
காணொளி காலத்திலும்
களிப்புதரும் மதுரசமே!
அருந்தினால் அறிவுவரும்
அற்புத அதிசயமே!
 
அள்ள அள்ளக் குறையாத
அட்சயப் பாத்திரமே....
அக இருள் அழிந்துவிடும்
நீ வரும் மாத்திரமே!
பூக்கின்ற புதுமலரே...
வாசிக்கும் போதெல்லாம்
வாசம்தரும் நறுமலரே...
சொல்லோடு சொல் சேர்ந்து
சொக்கவைக்கும் சொல்லமுதே...
கண்ணோடு கை கோர்த்து
கண்திறக்கும் களஞ்சியமே...
காணொளி காலத்திலும்
களிப்புதரும் மதுரசமே!
அருந்தினால் அறிவுவரும்
அற்புத அதிசயமே!
அள்ள அள்ளக் குறையாத
அட்சயப் பாத்திரமே....
அக இருள் அழிந்துவிடும்
நீ வரும் மாத்திரமே!

No comments:
Post a Comment