வருவதை எல்லாம் 
.....வரிகளாய் மாற்றித்
தருவதை எல்லாம் 
.....தரமாய்த்- தருவேன்!
அருளும் இறைவன் 
.....அளந்து கொடுத்தால்
வருமா கவிதை 
.......வரத்து?!
செ. இராசா
நண்பரின் கேள்வி
செ.இலட்சுமணக்ககுமார் :
நான் உங்க ரசிகன்
ரசிகனுக்கு சமீபகாலம் ஏமாற்றம் தருகிறீர்கள்
அதிகம் கவி வருவதில்லை
எனது பதில்:
Raja Manickam 
இனிய மனமார்ந்த நன்றி சகோ...
நலமா....
உண்மைதான் தங்களின் கூற்று...
குறள்
 வெண்பாக்கள், குறுஞ்சொற்பாக்கள், அளவடி வெண்பாக்கள், விருத்தங்கள், 
பாடல்கள், ஹைக்கூ, வசன கவிதைகள், புதுக்கவிதைகள்....என வடிவங்களில் 
பிரச்சினை இல்லை சகோ...
ஏறக்குறைய எல்லா வகையான கருவிலும் எழுதிய 
உணர்வு தோன்றுவதாலும், கூறுவது கூறல் குற்றம்; அறமில்லை என்ற கூற்றை 
ஏற்பதாலும், மிகவும் கவனமாகவே நகர்கின்றேன் சகோ. 
உண்மைதான் போன வருடம் முந்தைய வருடக் கணக்கை விட வரத்து மிகவும் குறைந்திருக்கிறது. 
இப்படி
 குறைவதும் மிகுதியாவது என் கையில் இல்லை சகோ. எல்லாம் வல்ல இறைவனின் 
கையிலும் தங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் ஊக்கத்திலுமே உள்ளது.
முயற்சி செய்கிறேன் சகோ...
(Blogல் சேமித்த காலத்தில் இருந்து வைத்துள்ள வருடாந்திர கவிதைக் கணக்கு கீழே)

No comments:
Post a Comment