அம்மா அம்மா அம்மா அம்மா....
அம்மா அம்மா அம்மா அம்மா....
பல்லவி
பொத்திப் பொத்தி வளர்த்தவதான் அம்மா அம்மா..
பூர்வ ஜென்ம கொடுப்பினைதான் அம்மா அம்மா...
தெய்வம் எங்கே காட்டு என்றால் அதோ அம்மா..
தேட வேணாம் முன்னே நிப்பா இதோ அம்மா...
சரணம்_1
உள்ளத நல்லத ஆக்கித்தான் போடுவா
தன்பசி பாராம...
கண்ணுல எண்ணைய போட்டுத்தான் தேடுவா
தன்வலி தீராம....(2)
தப்புக்கு தண்டனை தந்திடு வாருன்னு
அப்புட்ட சொல்லாம...
பிள்ளைய காத்திட உண்மைய மாத்துவா
தன்மனம் தாங்காம.....(2)
அம்மா அம்மா அம்மா அம்மா....
அம்மா அம்மா அம்மா அம்மா....
சரணம் 2
கிள்ளிக் கொடுக்குற சில்லறைக் காசுல
ஒன்னையும் சேர்க்காம
அள்ளிக் கொடுக்குற அம்மனா மாறுவா
எப்பவும் சோராம....(2).
எட்டி உதைக்கிற உள்ளக் குமுறல
எப்பவும் காட்டாம
தட்டிக் கொடுக்குறத் தாயெனத் தோன்றுவா....
அப்பவும் மாறாம....(2)
அம்மா அம்மா அம்மா அம்மா....
அம்மா அம்மா அம்மா அம்மா....
செ.இராசா
No comments:
Post a Comment