அன்பு உறவுகளே,
முகநூலில்
நடக்கும் சதுரங்க வேட்டை பற்றி ஏற்கனவே நிறைய முறை எழுதியுள்ளேன்
என்றாலும் மீண்டும் எழுத வேண்டிய சூழ்நிலை உருவானதால் மறுபடியும்
எழுதுகிறேன் உறவுகளே.....
சமீப காலமாக பல வழிகளில் தில்லுமுல்லுகள்
நடப்பதை அறிவோம். அதில் சிலபல பற்றி தங்களுக்கு ஏற்கனவே தெரியும் என்றாலும்
நானும் சிலவற்றை இங்கேப் பதிவு செய்ய விரும்புகிறேன்.
1. இங்கே
இலங்கைத் தமிழர் வேடம் பூண்டு சிலர் உலவுகிறார்கள். பொதுவாக நான்
தமிழில்தான் உரையாடுவேன். ஆனால் அந்த நபரோ ஆங்கிலத்திலேயே என்னோடு தொடர்பு
கொண்டார். ஆரம்பத்தில் என் கவிதை அருமையாக உள்ளதாகப் பேசியவர், பிறகு
அதையெல்லாம் விட்டுவிட்டு பல தகவல்கள் கேட்க ஆரம்பித்தபோதுதான் உஷாராகி
Block செய்துவிட்டேன். இதை ஏன் எழுதுகிறேன் என்றால், மக்களே அவர்களின்
நோக்கம் முற்றிலும் வேறு என்பதைத் தெரிந்து கொண்ட பிறகு உடனே
துண்டிக்கவேண்டும் என்பதே...
2. கடந்த மார்ச் மாதம் நான் வீட்டைக்
காலி செய்யும் சூழ்நிலை வந்தபோது சில பொருட்களை விற்க முயன்றேன். முகம்
தெரியாத ஒரு நபர், 1100/-ரியாலுக்குப் பேசிவிட்டு 3000/- ரியால் கூடுதலாக
அக்கவுண்ட்டில் போட்டுவிட்டு. அதைத் திருப்பிதரச் சொன்னார் ஆனாலு வேறு ஒரு
அக்கவுண்ட்டில் போடச் சொன்னபோதுதான் நான் சுதாரித்துக் கொண்டேன். (அப்படி
செய்திருந்தால் வேறு வகையில் பின்விளைவுகள் வந்திருக்கும்...நல்லவேளை)
3.
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். இங்கே பெண்களுக்கு மட்டும் உள்பெட்டித்
தொந்தரவுகள் என்றில்லை. ஆண்களுக்கும் பல வழிகளில் வரும். நீங்கள் அவர்களோடு
கண்டித்து எழுதினாலும் சரி, நல்ல முறையில் எழுதினாலும்
சரி....அவற்றையெல்லாம் மிக அழகாக மாற்ற முடியும். ஆகவே, கவனம்!
4.
இணைய உலகத்தில் AI தொழில் நுட்பக் காலத்தில், விருப்பக் குறியீடுகளில்
உள்ளவற்றைப் பயன்படுத்துவதில்கூட சில சிக்கல்கள் உண்டு உறவுகளே....
அன்பார்ந்த விடயத்தை, மனமார்ந்த வாழ்த்தினைக் குறிக்கும் இதயக் குறியீட்டை
தப்பாகப் பார்க்கும் நபர்களை என்ன செய்வது?... அதுபோன்ற குறியீட்டை நீ ஏன்
பயன்படுத்துகிறாய் என்றும் மிரட்டல் பதிவுகள் உள்பெட்டியில் வருகின்றன.
(சவுதி அரேபியா மற்றும் குவைத்தில்
இதயக் குறியீடு அனுப்புவது சட்டப்படி தவறென்றும் தண்டனைக்குரிய
குற்றமென்றும் பார்க்கப்படுவதாக தற்சமயம்தான் சட்டம் ஏற்றியுள்ளனர்
என்கின்ற செய்தி அதிர்ச்சிகரமாக உள்ளது)
No comments:
Post a Comment