தேமதுரத் தமிழைத் 
........திகட்டாமல் தருவேன்
தென்றலென ஓடிவாயேன்!
பார்மணக்கத் தமிழைப் 
........பலகாலம் தருவேன்
பா-ரதத்தில் ஏறிவாயேன்!
நாவினிக்கத் தமிழை 
.........நன்முறையில் தருவேன்!
நாயகனே ஓடிவாயேன்!
வாழ்வினிக்கத் தமிழை 
.........வள்ளுவனாய்த் தருவேன் 
வாசகனாய் மாறிவாயேன்!
தமிழாக நிற்கின்ற 
........வேலய்யா- உந்தன்
தமிழ்கொஞ்சம் என்னுள்ளே 
.........ஊற்றய்யா!
தமிழாலே ஆள்கின்ற
.........வேலய்யா-எந்தன்
தமிழ்நெஞ்சம் கூடத்தான் 
.........ஏ(ஊ)ற்றய்யா!
செ. இராசா

No comments:
Post a Comment