உனக்குத்தான் எத்தனை பெயர்கள்?
பேனா இயக்கி - PEN DRIVE-
கட்டைவிரல் இயக்கி - THUMB DRIVE
வெட்டொளி இயக்கி - FLASH DRIVE
நினைவகக் குச்சி - MEMEORY STICK
என்றெல்லாம் உன்னை அழைத்தாலும்..
என்னைப் பொறுத்தவரை
உனக்கு "#சேமிப்பான்" என்ற பெயரே
பொறுத்தமென்று நினைக்கிறேன்...
உண்டியலில்...
எதைப் போடுகிறோமோ...
எவ்வளவு போடுகிறோமோ..
அதைத்தானே எடுக்க முடியும்?
அதேபோல்...
நிரம்பிய உண்டியலில்
மீண்டும் நிரப்ப முடியுமா என்ன?
இப்படி..
உண்டியல் போலவே உள்ளதால்
உன்னை "சேமிப்பான்" என்றழைப்பதுதானே சரி?
உண்மையில்
நீ ஒழுக்கமானவன்தான்
உன்னை ஒழுங்காகப் பாவித்தால்...
கண்ட இடமெல்லாம்
கால் வைத்தால்தான் சிக்கல்..
கெட்டும் போவாய்...கேடும் தருவாய்...
உன் தாத்தா ஃபிளாப்பி (Floppy)
எட்டடி பாய்ந்தபோது
உன் அப்பா சிடி (CD)
பதினாரடி பாய்ந்தார்....
ஆனால் நீயோ...
நூறடி அல்லவா பாய்கின்றாய்!!!
என்ன செய்ய?
இன்றைய பிரம்மாக்களால்
நேற்றைய பிள்ளைகள் பாவம்தான்....
இல்லை...இல்லை
அது பாவமல்ல...தியாகம்!!
அதோ..
உன்னைவிட வேகமாய்
உன் பிள்ளைகள் வருகிறதே...

(என் பிள்ளை கொடுத்த தலைப்பு இது)
No comments:
Post a Comment