#அலை_சூழ்_உலகு
நாம்
 ஓரிடத்தில் தனிமையில் இருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். உண்மையில் 
அங்கே நாம் மட்டும்தான் இருக்கிறோமா என்றால், கட்டாயம் இல்லையென்றே 
விஞ்ஞானம் சொல்கிறது. அதாவது நம்மைச்சுற்றிலும் பல்வேறு வகையான அலைகள் 
சூழ்ந்துள்ளது. என்னது அலைகளா?...
ஆம்...ரேடியோ அலைகள், மின்காந்த 
அலைகள், செல்போன் டவர் அலைகள், இப்போது WIFI என்னும் அருகலைகள் போன்ற பல 
அலைகள் நம் கண்களுக்குத் தெரியாமல் நம்மைச் சூழ்ந்துள்ளன. இந்த அலைகளின் 
வேகத்தை முடுக்கிவிடுவதால்தான் சிட்டுக்குருவி போன்ற சிறுகுருவி இனங்களே 
அழிந்ததாகவும் ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
இந்த அலைகள் 
ஒவ்வொன்றிற்கும் ஒரு அதிர்வெண் உள்ளது. நம்மால் 20Hz முதல் 20KHZ அதிர்வெண்
 கொண்டு எழுப்புகின்ற ஒலி அலைகளைக் கேட்க முடியும். அதுவே ஒலியாக மாறாத 
அலைகளை இதுதான் அவையென்று நம்மால் எளிதாக உணரமுடியாது. ஆனால் நாம் அவற்றை 
உணர்கிறோம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?! ஆம்...நாம் கடற்கரைக்கோ 
அல்லது இயற்கை சார்ந்த இடங்களுக்கோச் சென்றால் அங்கே இயற்கையாகவே ஒரு வித 
அதிர்வெண் கொண்ட அலைகள் வருகிறதாம். அவை 528 HZ அதிர்வெண் உள்ளதாகக் 
கண்டறிந்துள்ளார்கள். அட அதற்கு LOVE FREQUENCY அதாவது காதல் அதிர்வெண் 
என்று பேரும் வைத்துள்ளார்கள். இதுபோல் ஒவ்வொரு இயற்கை சார்ந்த இடங்களிலும்
 ஆலயங்களிலும் நல்ல அலைகளை நாம் உணரமுடியும். அதனால்தான் அங்கு 
போய்வரும்போது மனம் நிம்மதி அடைகிறது.
(YOUTUBE சென்று 528 Hz அதிர்வெண் என்று தட்டச்சு செய்யுங்களேன்... நீங்களே உணர்வீர்கள்)
இவ்வளவு
 ஏங்க....நம் மனித மனதில்கூட எழுகின்ற எண்ண அலைகளையும் EEG என்ற கருவியின் 
மூலம் அளவிட முடியும். மனிதனுடைய எண்ண அலைகள் 1 முதல் 40 HZ அதிர்வெண் 
கொண்டதாகும். இதில் சாதாரண உணர்ச்சி நிலையில் இயங்கும் மனிதன் 14-40வரையும்
 (Beta), மிகவும் அமைதியான  நிலையில் 7-13 வரையும் (Alpha), இன்னும் தியான 
நிலையில் அல்லது மயக்க நிலையில் (Theeta) 4-6 வரையிலும், இன்னும் சமாதி 
நிலையில் அல்லது உறக்க நிலையில் 1-3 (Delta) நிலையிலும் உள்ளதாக ஆய்வுகள் 
சொல்கின்றன. (இதையும் YOUTUBE ல் ஆதாரத்துடன் பார்க்கலாம்) மிகவும் 
கோபமானால் உணர்ச்சியின் உச்சத்தில் கொந்தளித்தால் 37--40என்று சென்று 
அதற்குமேல் போகமுடியாமல் மரணமே நிகழ்கிறது.
இங்கே நான் சொல்ல வருவது
 என்னவென்றால், நம்மைச் சூழ்ந்துள்ள எத்தனையோ அலைகளின் ஊடே நாம் 
எந்தமாதிரியான எண்ண அலைகளைப் பரப்புகிறோமோ நமக்கும் அவையே எதிரொலிப்பதால் 
நாம் முடிந்தவரை நல்ல எண்ண அலைகளைப் பரப்பி நம்மைச் சூழ்ந்துள்ள பேரண்டத்தை
 மாசின்றிக் காப்பாமோக. மேலும், நல்ல அதிர்வெண் கொண்ட இயற்கையான அலைகளை 
உள்வாங்கி மனம் அமைதிநிலை அடைய அவ்வப்போது கடல், மலை, வயல்,.....இல்லையேல் 
பூங்காவென எங்காவது அனைத்து கைப்பேசிகளையும் தூர வைத்துவிட்டு கண்களை மூடி 
காதுகளில் அலைகளை உள்வாங்குவோமென்று கூறி அன்பின் அலையில் 
விடைபெறுகின்றேன்.
நன்றி நன்றி!!!
02/04/2022
அலை சூழ் உலகு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment