வருகிறோம் வளர்கிறோம்
.......வளர்ந்தபின் போகிறோம்
மாறியது ஒன்றும் இல்லையே!
தருகிறோம் தளர்கிறோம்
.......தளர்ந்தபின் விழுகிறோம்
ஒருவராய் உயிர்க்கிறோம்
........ஒருவரில் கலக்கிறோம்
ஓடியது வாழ்வின் எல்லையே!
ஒருவரின் வழியிலே
........ ஒருவரை விதைக்கிறோம்
ஊழ்வரவு தீர வில்லையே!

No comments:
Post a Comment