ஈரடியால் இவ்வுலகை 
.......ஏற்றிவிட்ட வள்ளுவனார்
நேரடியாய்ப் பார்ப்பதுபோல் 
........நிற்கின்றார்- பாருமென
காரைக்* குடிவீட்டைக் 
........கண்டவர்கள் சொல்வதற்கு
யாரை வணங்கிடுவேன் யான்?!!
நற்சிலையை மாறாமல்
.........வார்த்தெடுத்த சிற்பியையா?
நற்சிலைக்குள் அன்புவைத்த
.........நட்பென்ற - கற்பினையா?*
அச்சிலையை ஏற்றிவைத்த
........ அத்தனைபேர் அன்பினையா?
உச்சத்தில் வைத்தேன் உணர்ந்து!!!!
**  காரைக் குடிவீடு (அ) காரைக்குடி வீடு
காரை என்றால் சிமெண்ட் என்ற பொருளும் உள்ளதால் சிமெண்டால் செய்த வீடு என்றும் காரைக்குடியில் உள்ள வீடு என்றும் பொருள்படும். (சிலேடை)
*நட்பு கற்பைப்போன்றது
இச்சிலையை அன்பளிப்பாய் வழங்கியவர் நண்பர் சிவா.... 



No comments:
Post a Comment