தெற்குக்குலச் சிங்கப் பெருமகன்
.....பச்சைத்தமிழ் வெற்றித் திருமகன்
........கள்ளர்குலக் காவல் தெய்வம் கதைகேளீர்...
சிவகங்கைச் சீமைச் சரகம்
.......மயில்ராயன் கோட்டை நாட்டின்
............மாவீரன் கருவப் பாண்டியன் கதைகேளீர்..
மெய்க்காவல் பணியில் என்றும்
.......பொய்க்காமல் வாழும் ஊராம்
..........பொக்காலி பட்டி என்னும் சேதுநகர்
காங்கிக் கருவ ருக்கும்
..தாய்வீரக் கருப்பாயிக்கும்
....நான்காம் பிள்ளை யாகப் பிறந்தாரே
திருமலைக் கோவில் வந்த
.....மன்னரின் குதிரை பின்னே
........தென்பக்கச் சேது நாடு சென்றாரே
பனிரென்டாம் வயதில் சென்றே
..... பல்கலைக் கற்றார் அங்கே
........மறவர்கள் தளபதி யாய் மாறினாரே
சிவகங்கைக் கோவ னூரில்
.......அகமுடைப் பெண்ணைக் கட்டி
............முக்குலப் பாலம் போட்ட மூத்தவரே
பிள்ளைகள் ஐந்தைப் பெற்று
... பெண்டாட்டி பிள்ளை யோடே
........போனாரே மீண்டுமவர் சொந்த நாடு..
வந்தாலும் வரவேற் பில்லை
.....சொந்தங்கள் பேச வில்லை
........போங்கடா என்றேயவர் புதுகை சென்றார்
புதுக்கோட்டை தொண்டைமானால்
..புதுவாழ்க்கை கண்ட தேவர்
......பிள்ளைகள் எல்லாம் கற்க வழிவகுத்தார்
நெல்லுருவிக் கொள்ளை யரால்
.... நேர்கின்ற கொள்ளை யாலே
..... மயில்ராயன் கோட்டை நாட்டார் புலம்பிநின்றார்..
எல்லோரும் ஒன்றாய்க் கூடி
......நல்லதோர் முடிவைத் தேடி
சிவகங்கை மன்னருக்கு ஓலை விட்டார்..
மாவீரன் கருவப் பாண்டி
.... வந்தால்தான் தீரும் என்றே
.......அம்பல காரரிடம் மன்னர் சொன்னார்
எல்லோரும் புதுகை சென்று
......வல்லோரை வாரும் என்றே
.........மன்றாடி மண்ணைக் காக்க வாருமென்றார்..
தன்பிள்ளை ஐவருக்கும்
...சரியான வாழ்க்கை செய்ய
...... சம்மதம் பெற்ற பின்னே மீண்டும் வந்தார்...
வளரிவேல் வாள்சிலம்பம்
மல்யுத்தம் வர்மக்கலை
கற்றவர் கருவப் பாண்டிச் சேர்வையன்றோ?!
நெல்லுருவிக் கொள்ளை யரைப்
...புல்லுருவி போலே வெட்டி
......திட்டங்கள் தீட்டி அதில் வெற்றி கண்டார்
அன்றுமுதல் கொள்ளையர்கள்
....அனைவருமே விட்டார் தொழில்
மயில்ராயன் கோட்டை நாட்டார் மகிழ்வுற்றார்...
சிவகங்கைச் சீமை சென்று
.. மன்னர்க்கு தளபதியாய்
திருமலைக் கோவிலையும் காத்து வந்தார்
தெற்குக்குலச் சிங்கப் பெருமகன்
.....பச்சைத்தமிழ் வெற்றித் திருமகன்
........கள்ளர்குலக் காவல் தெய்வம் கதை இதுவே...
✍️செ.இராசா
தெற்குக்குலச் சிங்கப் பெருமகன்
.....பச்சைத்தமிழ் வெற்றித் திருமகன்
........கள்ளர்குலக் காவல் தெய்வம் கதைகேளீர்...
சிவகங்கைச் சீமைச் சரகம்
.......மயில்ராயன் கோட்டை நாட்டின்
............மாவீரன் கருவப் பாண்டிச் சேர்வைக் கதை
இது...மாவீரன் கருவப் பாண்டிச் சேர்வைக் கதை
மெய்க்காவல் பணியில் என்றும்
.......பொய்க்காமல் வாழும் ஊராம்
..........பொக்காலி பட்டி என்னும் சேதுநகர்
காங்கிக் கருவ ருக்கும்
..தாய்வீரக் கருப்பாயிக்கும்
....நான்காம் பிள்ளை யாகப் பிறந்தாரே
திருமலைக் கோவில் வந்த
.....மன்னரின் குதிரை பின்னே
........தென்பக்கச் சேது நாடு சென்றாரே
பனிரென்டாம் வயதில் சென்றே
..... பல்கலைக் கற்றார் அங்கே
........மறவர்கள் தளபதி யாய் மாறினாரே
சிவகங்கைக் கோவ னூரில்
.......அகமுடைப் பெண்ணைக் கட்டி
............முக்குலப் பாலம் போட்ட மூத்தவரே
பிள்ளைகள் ஐந்தைப் பெற்று
... பெண்டாட்டி பிள்ளை யோடே
........போனாரே மீண்டுமவர் சொந்த நாடு..
வந்தாலும் வரவேற் பில்லை
.....சொந்தங்கள் பேச வில்லை
........போங்கடா என்றேயவர் புதுகை சென்றார்
புதுக்கோட்டை தொண்டைமானால்
..புதுவாழ்க்கை கண்ட தேவர்
......பிள்ளைகள் எல்லாம் கற்க வழிவகுத்தார்
நெல்லுருவிக் கொள்ளை யரால்
.... நேர்கின்ற கொள்ளை யாலே
..... மயில்ராயன் கோட்டை நாட்டார் புலம்பிநின்றார்..
எல்லோரும் ஒன்றாய்க் கூடி
......நல்லதோர் முடிவைத் தேடி
சிவகங்கை மன்னருக்கு ஓலை விட்டார்..
மாவீரன் கருவப் பாண்டி
.... வந்தால்தான் தீரும் என்றே
.......அம்பல காரரிடம் மன்னர் சொன்னார்
எல்லோரும் புதுகை சென்று
......வல்லோரை வாரும் என்றே
.........மன்றாடி மண்ணைக் காக்க வாருமென்றார்..
தன்பிள்ளை ஐவருக்கும்
...சரியான வாழ்க்கை செய்ய
...... சம்மதம் பெற்ற பின்னே மீண்டும் வந்தார்...
வளரிவேல் வாள்சிலம்பம்
மல்யுத்தம் வர்மக்கலை
கற்றவர் கருவப் பாண்டிச் சேர்வையன்றோ?!
நெல்லுருவிக் கொள்ளை யரைப்
...புல்லுருவி போலே வெட்டி
......திட்டங்கள் தீட்டி அதில் வெற்றி கண்டார்
அன்றுமுதல் கொள்ளையர்கள்
....அனைவருமே விட்டார் தொழில்
மயில்ராயன் கோட்டை நாட்டார் மகிழ்வுற்றார்...
சிவகங்கைச் சீமை மன்னர்
.. சசிவர்ணத் தேவர் சொல்ல
திருமலைக் கோவிலையும் காத்து வந்தார்
தெற்குக்குலச் சிங்கப் பெருமகன்
.....பச்சைத்தமிழ் வெற்றித் திருமகன்
........கள்ளர்குலக் காவல் தெய்வம் கதை இதுவே...
✍️செ.இராசா
No comments:
Post a Comment