05/09/2018

துணிவே துணை (குறளின் குரலில்)


கற்பதைக் கசடற கற்றுவிட்டு- தொழில்
விற்பன்னர் ஆகிடத் துணியாமல்- தான்
கற்பதன் பயனே பணிக்கென்று- பலர்
பற்றிய பணிகளில் உழல்கின்றார்!

வரவுகள் குறைவா யிருந்தாலும்-தொழில்
வரவினைச் சிறிதென நினையாமல்- சிறு
வரவையும் பெரிதென மதிப்போரே- தம்
வரவினில் இன்பம் அடைகின்றார்!

எண்ணிய பின்னே தயங்காமல்- மனம்
எண்ணிய முன்னதில் தளராமல்- தான்
எண்ணிய ஒன்றில் துணிபவரே- தாம்
எண்ணிய இலக்கை அடைகின்றார்!

No comments: