கணத்தின் துளியை மனத்தில் ஏற்றி
அனுபவக் கோப்பையில் அதனை ஊற்றி
கற்பனைச் சாற்றில் கருவினைக் கலந்து
கவிதையில் வடித்துத் தருபவன் கவிஞன்!
மோனத்தில் பிறந்த ஞானத்தின் கருத்தை
அணுவில் அணுவாய் அகத்தில் நுழைத்து
அருந்தும் சுகத்தில் அகிலத்தை மறந்து
கருவில் லயித்து ருசிப்பவன் ரசிகன்!

(கவிஞனின் ரசிகனாய்
அண்ணனின் அடிபொடி)
No comments:
Post a Comment