கருணை/ மழைநீரின் கருணைபோலே 
 கண்ணு மண்ணு தெரியாம 
 கண்டபடி குடிச்சிகிட்டு 
 தன்னைக்கூடத் தெரியாம 
 தள்ளாடி நடந்துகிட்டு 
 
 வீடு வாசல் போகாம 
 வீதியில விழுந்தவன் மேல் 
 பாவம் பாவம்  என்று சொல்லி
 பாசம் காட்டும் அம்மாக்களே....
 
 உப்புக்கடல் மேல் பொழியும்
 மழைநீரின் கருணைபோலே 
 உங்கமகன்  மேல் பொழியும் 
 மனக்கருணை உள்ளதன்றோ?!
 
 --செ. இராசா--- 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment