பல்லவி
உழுதவன் கணக்கு பார்த்தா
உலக்கு கூட மிஞ்சல
உழைச்சவன் கணக்கு கேட்டா உனக்கு ஏனோ பிடிக்கல (2)
நீயும் வந்து நிலத்தில் நின்னு பாரு -----வந்தா
நீயே சொல்வ எங்க வரலாறு
ஊருக்கெல்லாம் சோறு போட்ட தாரு
இன்னும்
எங்க வாழ்க்கை மாறலையேன் கூறு
இந்த நிலைமை எப்போ மாறும்? கொஞ்சம் எங்கள நினைச்சுப் பாரும்
சரணம்_1
விளைய வைக்கும் மக்களத்தான் நினைச்சுப் பாத்தியா?
அலைய வைக்கும் பேர்களத்தான்
கேள்வி கேட்டியா?!
உழவரோட வாழ்க்கை இன்னும் உசரவே இல்லை
உழைக்கிறவன் முதுகு மட்டும் நிமிரவே இல்லை
வாலுபோயி கத்திவந்த கதையப்போல
மாறிமாறி வச்சுசெய்யும் வாழ்வே தொல்லை...
............
போனுலயே தட்டிதட்டிப் பொருள வாங்குறான்
லோனுலயே வட்டிகட்டி பெருமை பீத்துறான்
படத்தைக்கூடப் பார்க்காமலே கழுவி ஊத்துறான்
படத்தைமாத்தி படத்தைமாத்தி ஸ்டேடஸ் போடுறான்
போனுலயே நோண்டிநோண்டிப் பொருள வாங்குறான்
வானுலயே பறப்பதுபோல் கனவு காணுறான்
படத்தைக்கூடப் பார்க்காமலே கழுவி ஊத்துறான்
படத்தைமாத்தி படத்தைமாத்தி ஸ்டேடஸ் போடுறான்
கேப்பிலெல்லாம் கெடாவெட்டி சீனப் போடுறான்
ஆப்புலதான் எப்போதுமே பொருள வாங்குறான்
கேப்பிலதான் கெடாவெட்டி சீனப் போடுறான்
படத்தைக்கூடப் பார்க்காமலே கழுவி ஊத்துறான்
படத்தைமாத்தி படத்தைமாத்தி ஸ்டேடஸ் போடுறான்
விளைய வைக்கும் மக்களத்தான் நினைச்சுப் பாத்தியா?
அலைய வைக்கும் பேர்களத்தான்
கேள்வி கேட்டியா?!
உழவரோட வாழ்க்கை இன்னும் உசரவில்லீங்கோ..
உழைக்கிறவன் முதுகு மட்டும் நிமிரவில்லீங்கோ...
வாலுபோயி கத்திவந்த கதைதான் மச்சி...
No comments:
Post a Comment