வந்த காலம் தொட்டு நானும்
.....வந்து வந்து போகிறேன்
அந்தக் காலம் போல இன்னும்
....ஆர்வம் மட்டும் தீரலை...
வெந்த சோறத் திண்ணு திண்ணு
.....நொந்து போகும் வாழ்வுல
இங்க வந்து பூரி திண்ணா
......எந்தன் சோகம் காத்துல....
செ. இராசா
கத்தாரில்
 உள்ள இந்தக் கடைக்கும் எனக்குமான பந்தமென்பது கிட்டத்தட்ட 17+ வருடங்கள் 
உறவுகளே.  ஆம் ....முதன் முதலாக இங்கே வரும்போது தெரியவில்லை, நான் இப்படி 
பந்தப்படுவேனென்று.  சிறு இடைவெளிக்குப் பிறகு இன்று கத்தார் மனவளக்கலை 
போய்விட்டு, இந்த அல்சர்க்கா உணவகம் வந்தேன். என்னே வரவேற்பு......ப்பா... 
இது மலையாளி உணவகம்தான். ஆனால், இங்கே அனைத்து நாட்டினரும் வருகிறார்கள். 
குறிப்பாக அரபிகள் விரும்பும் இந்திய உணவகம் இது. உடனே....விலை அதிகம் 
என்று எண்ண வேண்டாம். 2006 முதல் இன்று வரை ஒரு பூரி ஒரு ரியால் (22 ரூ) 
மட்டுமே. 
நல்ல மனிதர்கள். 
நல்ல உபசரிப்பு
நல்லா இருக்கனும்...
வாழ்க வளமுடன்!
செ. இராசா

No comments:
Post a Comment