காமம் என்று சொன்னதுமே
காதைப்
பொத்திடும்
உறவுகளே!
காமன் நெஞ்சில் வந்ததுமே
கண்ணில்
கணையேன்
விடுகின்றீர்?
தந்தை செய்த வேள்வியிலே
தாயில்
தோன்றிய
உறவுகளே!
விந்தை செய்யும் காமத்திலே
வேண்டா
வெறுப்பேன்
கொள்கின்றீர்?
❓❓❓❓❓❓❓❓❓❓❓❓
காம சூத்திரத் தத்துவத்தைக்
கற்றிடும்
முறைமையில்
கற்றிடவே
காமச் சித்திரச் சிற்பங்களைக்
கோவில்
குளங்களில்
வடிவமைத்தார்!
காமம் என்கிற பாற்கடலைக்
கட்டிய
துணையுடன்
கடந்திடவே
வாமன வடிவிலே வள்ளுவரும்
வையகம்
தளைத்திட
வழிசெய்தார்!
✅✅✅✅✅✅✅✅✅✅✅✅
அடக்க நினைத்தால் அடங்காமல்
அறிய
நினைத்தால்
அடங்குகின்ற
கடவுள் படைத்த காமத்தின்
கடலைக்
கடக்க
முயல்பவரால்:
இன்பம் துன்பம் இரண்டையுமே
எளிதாய்க்
கடக்க
முடிவதினால்
இன்பக் கடலாம் காமத்தை
இனிதே
கடந்து
வென்றிடுவீர்!
✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️
✍️செ. இராசா
#காமம்_2
#காமமென்னும்_கடல்
#வள்ளுவர்_திங்கள்_96
No comments:
Post a Comment