பாரி முதல் காரி வரை பாரிலுயர் சரித்திரமும் கலைஞர் முதல் கவிக்கோ வரை கலக்கியவர் கதைகளையும் கண்ணன் முதல் திண்ணன்* வரை கடவுள்பக்தி வரிகளையும் என்னெழுத்தில் எழுதியதை எத்தனை பேர் படித்தீரோ?!
சேலையில தூளி கட்டி சீரா நல்ல பாட்டு கட்டி செல்லங்கள தூங்க வச்சோம் அப்போ! கக்கத்துல பேபி வச்சு பக்கத்துல டேபு வச்சு செல்லங் காட்டி கெஞ்சுறாங்க இப்போ!
ஆடுமாடு கோழி காட்டி ஆகாயத்தில் நிலவு காட்டி சோறு ஊட்டி வளர்த்ததெல்லாம் அப்போ! தட்டிதட்டி சேனல் மாற்றி குட்டிசுட்டி படத்த ஓட்டி டிபன் திங்க சொல்லுறாங்க இப்போ!
பர்கரும் பீட்சாவும் பழகிய தலைமுறைக்கு கருப்பு கவுனிபற்றி கவிதையில என்ன சொல்ல?! ஓட்சும் கெலாக்சும் உண்ணுகிற தலைமுறைக்கு சிவப்பு அரிசியோட சிறப்புகள என்ன சொல்ல?
மருந்த விருந்தாக்கி அருந்துகிற தலைமுறைக்கு கூகிள் சொன்னாலும் கேட்கத்தான் நேரமில்லை...!!!
✍️செ. இராசா
சாப்பிட்டு பாருங்க அல்வா மாதிரி இருக்கும்
ஆம் நண்பர்களே. நமது நாட்டின் மன்னர்கள் ஆட்சியில் அரசர்கள் மற்றும்
அரசிகள் சாப்பிடும் அரிசி என்று பெயர் பெற்ற கருப்பு அரிசி எனப்படும்
கவுனி அரிசி பயன்பற்றி நமக்கு தெரியுமா?
ஆனால் சீனா வில் உள்ள
அனைத்து மக்களுக்கும் இந்த அரிசியின் மகத்துவம் பற்றி தெரிந்ததனால்
உலகிலேயே சீனாவில்தான் அதிக அளவில் இந்த அரிசியை பயிரிட்டு வருகின்றனர்.
பண்டைய காலத்தில் சீனாவில் இந்த அரிசியை அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள்
மட்டுமே சாப்பிட வேண்டும் என்று சட்டமே இருந்ததாம். நம்ம ராசராசன் சோழன்
காலத்தில் இதை ராஜாங்க உணவாக உண்டார்களாம்.
வாரத்தில் 2 முறை இந்த கவுணி அரிசியை சமைத்து சாப்பிட்டாலே போதும். இதனால் கிடைக்கும் மருத்துவ பயன்கள் அபரிவிதம்.
கவுனி அரிசியின் பயன்கள் ************************* புதிதாக திருமணம் ஆன ஆண்கள் இந்த கவுனி அரிசியை சாப்பிட்டால் நல்ல உடல் பலம் பெறலாம். இந்த அரிசியில் வடித்த சோற்று கஞ்சியை குடித்து வந்தால் குதிகால் வலி நீங்கும்.
இந்த கவுனி அரிசி -யில் உள்ள ஆன்தோசயானின் என்ற நிறமி நமது இதயம், மூளை,
மற்றும் இரத்த குழாய் செயல்பாடுகளை புத்துணர்ச்சியாய் வைக்க உதவுகிறது.
மேலும் கவுனி அரிசி -யில் வைட்டமின் இ உள்ளதால் தோல் மற்றும் பார்வை சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
கவுனி அரிசியில் ஆன்டிஆக்சிடன்ட் அதிகளவில் உள்ளது. இதனால் சர்க்கரை நோய்,
புற்று நோய், இதய நோய்கள், உடல் எடை அதிகரிப்பு, கெட்ட கொழுப்பு
போன்றவைகள் இருந்த இடம் தெரியாமல் போகும். அதிக நார்ச்சத்து உள்ளதால்
செரிமான பிரச்சினை மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களும் குணமாகும்.
மேலும் இரும்புச்சத்தும் இருப்பதால் நரம்புகளுக்கும் வலுவை கொடுக்கிறது.
இந்த கவுனி அரிசி -யில் செய்த இனிப்பு பொங்கல் அவ்வளவு சுவையாக இருக்கும்.
செட்டிநாடு சமையல் விருந்துகளில் முதலிடத்தில் இந்த கவுனி அரிசி பொங்கல்
இருக்கும்.
கூவிக்கூவி வித்தாலும் கூட்டம் இன்னும் கூடலை! கூப்பாடு போட்டாலும் கூறு கட்ட முடியல! எல்லாருக்கும் சீட்டு தந்தும் கல்லா கட்ட முடியல! எல்லாருமே முழிச்சதால சில்லறைக்கும் வழி இல்லை!
ஐயோ என்ன கொடுமையின்னு குய்யோ முய்யோன்னு கத்துறான்! வரவே இன்னும் வல்லையின்னு வயித்து வலியில் துடிக்கிறான்!
வீட்டுக் கொரு இஞ்சினியர் வீட்டைக் காவல் காக்குறான்! வேலை வெட்டி கிடைக்காமல் வெட்டி வேலை பார்க்குறான்!
#நேர்_கொண்ட_பார்வையில்
நீ செல்லும் போது
யார் எங்கு சென்றாலும்
நீ செல்ல வேண்டாம்! ஊர் போகும் பாதையில் ஊறுள்ள போது யார் எங்கு போனாலும் நீ போக வேண்டாம்!
பார் பேசும் வார்த்தையில் பழுதுள்ள போது யார் என்ன சொன்னாலும் நீ கேட்க வேண்டாம்!
வா என்று சபலங்கள் வரவேற்கும் போதும் நோ என்று வெட்டிவிட நீ தயங்க வேண்டாம்!
✍️செ. இராசா
(அப்புறம் படம் நல்லா இருக்கு...உண்மையிலேயே அஜீத் நல்லா
நடிச்சிருக்காப்ல. இவரு மாதிரி ஒரு பெரிய கதாநாயகர் இந்த மாதிரி கருத்துள்ள
படத்தில் நடிப்பது வரவேற்கத் தகுந்த ஒன்று.👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽)
அட்றா அட்றா அட்றா! அட்றா தம்பி அட்றா! தொட்றா தொட்றா தொட்றா! தொட்றா தம்பி தொட்றா! போற்றும் உலகம் போற்றட்டும்! தூற்றும் உலகம் தூற்றட்டும்! பற்றிக் கொண்டுத் திரியாதே! தொற்றிக் கொண்டுத் துவளாதே! (அட்றா....)