05/10/2020

ஆத்திசூடி விளக்கம் பகுதி-6, நகர வருக்கம்

#ஆத்திசூடி_விளக்கம்_பகுதி_6
#குறள்_வெண்பாவில்_தெளிவுரை
#நகர_வருக்கம்

#நன்மை_கடைப்பிடி_1
நன்மை தருகின்ற நல்ல விடயத்தை
என்றும் கடைபிடித்து வாழ்

#நாடொப்_பனசெய்_2
இந்நாட்டில் வாழ்ந்தாலும் எந்நாடு சென்றாலும்
அந்தந்த நாடொப்பச் செய்


#நிலையிற்_பிரியேல்_3
இன்நிலை போனாலும் என்நிலை வந்தாலும்
தன்நிலை மாறாமல் நில்

#நீர்_விளையாடேல்_4
நீரில் குதிப்போர்க்கு நேரலாம் ஆபத்து
நீரென்றும் நெஞ்சில் நிறுத்து

#நுண்மை_நுகரேல்_5
அற்ப விடயத்தில் ஆழ்ந்து நுகராமல்
அற்புதம் யாதென அறி

#நூல்_பல_கல்_6
நூல்பல கற்றால்தான் நுண்ணறிவு மேம்படும்
ஆல்போல் படர்ந்து படி

#நெற்பயிர்_விளை_7
நிலத்தை உழுததில் நெல்வித்தைத் தூவி
வி
ளைந்தபின் உண்ண விரும்பு

#நேர்பட_வொழுகு_8
நேர்மை தவறாமல் நிற்கும் ஒழுங்கோடு
நேர்த்தியாய் என்றைக்கும் நில்

#நைவினை_நணுகேல்_9
நையப் புடைப்பதுபோல் நோவினைத் தந்திடும்
நைய வினைகள் விடு

#நொய்ய_வுரையேல்_10
நொய்நொய் எனப்பேசி நீட்டி முழங்காமல்
மெய்யை எளிதாய் உரை

#நோய்க்கிடங்_கொடேல்_11
வாய்க்கிடம் தந்து வரவரத் தள்ளினால்
நோய்க்கிடம் ஆகும் நிறுத்து

✍️செ.இராசா

No comments: