10/03/2019

நான்...#நரம்பில்லா_நாக்கு



சுழன்று சுழன்று ஆடுவதில்
சுழலும் புவியை வென்றிடுவேன்!

எல்லை தாண்டி வராமலே
ஏழாம் உலகை அளந்திடுவேன்!

ஏதொரு ஆயுதம் இல்லாமலே
எதிரியை எளிதில் வதைத்திடுவேன்!

எனக்கொரு நன்மை வருமென்றால்
என்னையும் உடனே மாற்றிடுவேன்!

நான்...#நரம்பில்லா_நாக்கு

No comments: