05/03/2019

136வது கவிச்சரம்---பேச்சு


தமிழ்த்தாய் வணக்கம்
*********************
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பத்துப்பாட்டு பாடுகையில்
எட்டுத்தொகை எழிலோடு
பதிணென்கீழ் கணக்கோடு
படியேறி வரும்போது
காவியங்கள் இலக்கியங்கள்
சாமரங்கள் வீசுகையில்
வீறுநடை போட்டுவரும்
வீரமிகு அன்னையினை
வள்ளுவனின் கொள்ளுப்பேரன்
வரிகளினால் வாழ்த்துகின்றேன்!

தலைமை வணக்கம்
*******************
💐💐💐💐💐💐💐💐💐
சினம் கொண்ட வேகத்தில்
சிதறி விழும் வார்த்தைகளில்
நாகரீக அனலிருக்கும்- நம்ம
நடுவர் பெயர் அதிலிருக்கும்!

கவிதையின் ராணியாய்
கவிதாவின் ராசாவாய்
வீற்றிருக்கும் தலைமையினைப்
போற்றியே மகிழ்கின்றேன்!

அவை வணக்கம்
****************
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எத்தனையோ குழுமங்கள்
சப்தமின்றி இருக்கையிலே
எப்போதும் கவிபாடும்
என்னருமைப் பட்டறையை
தமிழ்ச்சோலை மலர் தூவி
தலைகுனிந்து வணங்குகின்றேன்!

வீரியம் நிறைந்தது
*****************
மனதில் நுழைந்த ஒன்று
மதியின் அடி புகுந்து
விரைவில் வெளிவருமே
விவேகப் பேச்சாக...

பேச்சு 🎤😊🗣
*******************
வரிவடிவம் இல்லாத மொழி உண்டு
ஒலிவடிவம் இல்லாத மொழி உண்டா?!
படிக்கத் தெரியாத பாமரன் உண்டு
பேசத் தெரியாத இனம் உண்டா?!

பெரியார் முதல் கலைஞர் வரை
பெரியவாள் முதல் கம்பவாரிதி வரை
நேரு முதல் மோடி வரை
ஹிட்லர் முதல் டிரம்ப் வரை
பேசாமல் இருந்திருந்தால்
இவ்வுலகம் பேசிடுமா?!!

இலக்கிய மன்றங்கள்
........இதயத்தைத் திறக்கும்!
பட்டி மன்றங்கள்
.........பட்டை தீட்டும்!
கருத்தரங்கங்கள்
.........கண்களைத் திறக்கும்!
அரசியல் அரங்கங்கள்
..........அறிவைக் கீறும்!
ஆன்மீகச் சொற்பொழிவுகள்
..........ஆன்மாவைக் கிளறும்- எனில்
வீரியமானது பேச்சுதானே?!

நன்றி நவில்தல்
****************
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எத்தனையோ கவிஞர்கள்
ஏற்றம்பெற்ற அவையினிலே
நான் எனும் மண்குடமும்
நான்கு வார்த்தை பேசியதில்
தவறேதும் இருக்குமெனில்
தாயாகிப் பொருத்தருள்வீர்!

மனமார்ந்த நன்றி! நன்றி! நன்றி!

No comments: